அந்த அற்புத தலைவனை
திரும்பவும் பார்க்க வேணும்!!

என்ட மகனோட குமரப்பா, புலேந்திரன், ரகு, லாலாரஞ்சன், சீலன், மாத்தையா, செல்லக்கிளி அம்மான் எல்லாரும் அடிக்கடி வெளியில போய் வருவினம். ஆனா தலைவர் மட்டும் என்ட மகன்ட அறைக்குள்ள இருந்து இயக்க வேலையள பார்த்துக்கொண்டிருப்பார்.

அந்த நேரங்களில் நான் தனியா சமைக்கும் போது, எனக்கு விறகு வெட்டி ஒத்தாசையா இருப்பார். சில வேளை சாப்பாட்டுக்கு கஷ்டமா இருக்கும் அந்த நேரத்தில் மரவள்ளி கிழங்கு தான் மூண்டு நேர சாப்பாடா இருக்கும்.

இப்பிடி தான் என்னோட பிள்ளைகள் இந்த மண்ணுக்காக போராடினதுகள்.

அந்த அற்புத தலைவனை நான் மீளவும் ஒருக்கா பார்க்க வேணும். அவர் மீள வரவேணும்…

இதனை கூறியவர் 1985 இல் அச்சுவேலி சுற்றிவளைப்பில் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதருடைய தாயார் மகேஷ்வரி.

(இதை சொல்லி முடிக்கும் போது அந்த தாயின் கண்களில் கண்ணீர் முட்டியது)

(நிஜமான விடுதலையை நேசித்த ஒரு மாவீரனின் தாய் மட்டும் சத்தமா பேசுறா …இங்குதான் உண்மையான தியாகத்துக்கு அர்த்தம் என்ன என்று நாங்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம்)….!