அனைவரும் படியுங்கள்…..

இது தான் தமிழர்களின் போர் அறம்…!

தமிழர்அறம்

“பகைவரோடு போர் புரியும் போது அறத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்பதே தமிழர் பண்பு. இராமன் ஒரு மரத்தில் மறைந்திருந்து வாலியை அம்பெய்திக் கொன்றான் என்கிறது இராமாயணம். மகாபாரதத்தில் பல்வேறு சூழ்ச்சிகளைக் கண்ணன் செய்ததால்தான் பாண்டவர் அணி வெல்ல முடிந்தது. ஒரு முறைக்கு மேல் அர்ச்சுணன் மீது அம்பெய்யக்கூடாது என்று குந்திதேவி மூலம் கர்ணனிடம் சத்தியம் வாங்கச் செய்தான். தேரைப் பூமிக்கு கீழ் அழுத்தினான். மேலும் பல சூழ்ச்சிகளைக் கண்ணன் செய்ததால்தான் குருசேத்திரப் போரில் பாண்டவர்கள் வென்றார்கள். இல்லையேல் தோற்றிருப்பார்கள். இவ்வாறான நாயவஞ்சக முறைகளைத் தமிழர் போர் அறம் ஏற்கவில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போரில் தமிழர் அறத்தைக் கடைபிடித்தார். சிங்களப் பொதுமக்களைக் கொல்லும் நோக்கத்தில் அவர் குண்டு போடச் சொல்லவில்லை. சிங்களப் பெண்களை மானபங்கப்படுத்தும் செயலில் விடுதலைப் புலிகளை ஈடுபடச் செய்யவில்லை. இந்த ஒழுக்கக்கேடுகள் மற்றும் அறங்கெட்ட செயல்கள் அனைத்தையும் சிங்களர்கள் செய்தார்கள். சிங்களத் தலைமை அவற்றை அனுமதித்தது. சிங்களர் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள்.

கட்டநாயக்கா விமானத் தளத்தில் நின்ற விமானங்களைத் தகர்த்து விட்டுத் திரும்பியது விடுதலைப் புலிகளின் விமானப்படை. எங்கேயும் பொதுமக்கள் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படாமல் படை இலக்கை மட்டும் தாக்கிவிட்டுத் திரும்பியது புலிகளின் விமானம். இதுதான் தமிழர்களின் போர் அறம்!”.

ஐயா பெ.மணியரசன்