Fotor1120112954

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே…..!

அனைவரையும் வசியம் பண்ணும் தலைவரின் தனித்துவம் மிக்க அழகு பற்றி ஓவியர் வீரசந்தானம்…

உலகின் பல்வேறுபட்ட விடுதலைப் போராட்டங்கள் பல்வேறு கொள்கைகளுன் பலவேறுபட்ட தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

ஆனாலும் ஒவ்வொரு தலைவர்களதும் உடற் கட்டமைப்பும் தோற்றமும் மாறுபட்டிருப்பது பொதுவான நியதி.

விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய ஒரு பகிர்வில்

தமிழகத்தில் பிரபல ஓவியரும் சிற்பக்கலைஞரும் தமிழ் உனார்வாளருமான வீரசந்தானம் புகழேந்தி குறிப்பிடுகையில் ,

முப்பரிமானத் தோற்றத்தில் தான் பெற்ற ஓவிய அறிவின் அடிப்படையிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரன் பிறப்பிலே ஒரு கம்பீரமும் தனி அழகும் கம்பீரமான மீசையும் உடைய தனது தனித்துவத்தை காட்டியமையே விடுதலைப் புலிகள் அமைப்பும் அப்போராட்டமும் உலகில் இன்றுவரை வீரநடைபோடக் காரணம்

திருமணத்திற்காக தமிழ்நாடு வந்திருந்த தங்கை மதிவதனியிடம் ஒருமுறை கதைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கையில்,

தம்பி பிராபகரனின் அழகைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என கேட்கையில்.,

என் கணவனிடம் எதை அழகு என கூறுவது – காரணம் அவர் ஒட்டுமொத்த தமிழர்களாலும் நேசிக்கபப்டுகின்றார், அதனால் அவரின் அழகைப் பற்றிக் கூற எனக்கு தகுதி இருக்குமா எனும் வினா எனக்குள்ளேயே எழுகின்றது.

இதனை என் கணவர் விரும்பவும் மாட்டார் – அனுமதிக்கவும் மாட்டார். – காரணம் அவர் ஒட்டுமொத்த தமிழருக்குமே ஒரு நண்பனாக விளங்குகின்றார். இப்படியாக தங்கை மதிவதனி தனக்கே உருத்தான அந்த சிரிப்புடன் பதிலளித்தார்.

தம்பியின் பலத்தையோ அழகையோ யாரும் மிஞ்ச முடியாது, அவர் போல இனி யாரும் பிறந்திட முடியுமோ.. அது அவனுக்கே உரித்தான தனித்துவமும் தனிப் பண்பும் என்றார் வீர சந்தானம்.

பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரனே…..!