(ஜ)யம் எமக்கில்லை
(ஒ)ன்றுபடு தமிழினமே

(அ)ன்னை மண்ணை மீட்க்க
(ஆ)யுதம் சுமந்தோம்
(இ)ன்னல் தந்து எம்மை கொன்ற
(ஈ)னப்பிறவிகளின்
(உ)யிர் பறிக்க களத்திலே புலியாகி
(ஊ)ண் உறக்கமின்றி நடந்தோம்
(எ)ட்டி கால் வைத்த பகைவரை
(ஏ)றி மிதித்தே கொன்றோம்
(ஜ)யம் எமக்கில்லை
(ஒ)ன்றுபடு தமிழினமே
(ஓ)ராயிரம் பகை வீழும்
(ஒள)டதம் காப்போம்
எங்கள் எழுத்தோடும் ஆ(ஃ)யுதத்தை நாம் சுமக்கின்றோம்…
=சிவா தமிழீழம்=