அன்று சி.வி.யை எதிர்த்த செந்தில் இன்று ஆதரவு !

28-09-08மீரியாபெத்த  மண்சரிவில் புதைந்த மக்களின் உறவுகளுக்காக வடக்கும் கிழக்கும் துடிதுடித்து உதவி கரம் நீட்டி உதவ வந்த போது  இ.தொ.கா கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு அமைச்சர் செந்தில் அப்பொழுது ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் வடகிழக்கு அரசியல்வாதிகள்  தங்கள் மாகாணத்தில் உள்ள மக்களை கவனித்துக்கொள்ளட்டும் மலையக மக்களை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்பது யாவருக்கும்  தெரிந்தவிடயமே.

ஆனால் தற்பொழுது கடந்த வாரம் வட மாகாணத்தில் நடைப்பெற்ற  எழுக தமிழ் நிகழ்ச்சியை பாராட்டியிருப்பதோடு அந்த நிகழ்ச்சியை இ.தொ.கா முழுமையாக ஆதரிப்பதாகவும் மிகவும் நியாயபூர்வமான நிகழ்ச்சியெனவும் புகழாரம் சூட்டியுள்ளதோடு இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரும் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அன்று மகிந்தவை திருப்திபடுத்தவே வடகிழக்கு மக்களை மீரியாபெத்த மக்களுக்கு உதவ வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தாரா அல்லது இன்று அரசாங்கத்தின் ஆதரவு தனது மாமாவிற்கு இல்லாத காரணத்தாலா என்பது புதிராகவே இருக்கின்றது. எனினும் இலங்கையில் வாழும் சகல தமிழ் மக்களும் ஒன்றினைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது மாத்திரம் உண்மையாகும்.

(www.eelamalar.com)