அமெரிக்காவுடன் இணையும் யாழ்ப்பாணம்!

இலங்கையின் வடக்கு மாகாணத்தின் தலைநகர் யாழ்ப்பாணம் அமெரிக்காவின் மிக்சிக்கன் மாகாணத்திலுள்ள ஸ்ரேலிங் ஹைற்ஸ் (Sterling Heights) எனும் நகரத்துடன் சகோதர நகரமாக இணைந்துகொள்ளவுள்ளது. இம்முடிவு அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைத் தனது இரட்டை நகர் அல்லது நட்பு நகராக, Sterling Heights என்ற நகரம் தெரிவு செய்வதற்கு, அந்த நகரத்தில் வாழும் சுப்பிரமணியம் மணிவண்ணன் என்பவர் உழைத்திருக்கிறார்.

ஸ்ரேலிங் ஹைற்ஸ் அமெரிக்காவின் மெக்சிக்கன் மாகாணத்தில் அமைந்துள்ளதுடன், அதிகளவான தமிழ் மக்களைக் கொண்ட மாகாணமாகவும் காணப்படுகின்றது. இது கனடா மற்றும் அமெரிக்காவின் எல்லைப்பகுதியில் காணப்படும் மாகாணமாகும்.

(www.eelamalar.com)