எதிர்காலத்தில் அரசாங்கத்துக்கு பாரிய தலையிடியைக் கொடுப்போம் –மகிந்த!

கூட்டு எதிர்க் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆரம்பித்துள்ள எதிர்ப்பு கூட்டங்கள் அரசாங்கத்துக்கு பாரிய ஒரு தலையிடியாகும் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் நாள் காலியில் நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கெதிரான கூட்டமானது நாடு முழுவதும் பரவவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு நாடு முழுவதிலுமுள்ள மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தின் நடவடிக்கையில் அதிருப்தியடைந்துள்ள மக்கள் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளனர் எனவும், இந்த அரசாங்கம் மக்களுக்கு எதையும் செய்யவில்லையெனவும் குற்றம் சுமத்தினார்.

இந்தக் கூட்டங்களின் மூலம்இ அரசாங்கத்துக்கு தகுந்த பாடம் ஒன்றை புகட்டவுள்ளோம் எனவும் சூளுரைத்துள்ளார்.