அரசு நெருக்கடிக் குள்ளாகுமா?

16-10-07ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய உரையால், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களும் பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி நேற்று தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். இந்த நிலையில், தற்போது ஆணைக்குழுவின் தலைவர் டி.பி.வீரசூரிய உட்பட அதன் ஆணையாளர்கள் அனைவரும் ஒருமித்து இத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பதவி விலகும் பட்சத்தில் அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்துமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விசாரணை ஆணைக்குழுக்கள் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளதோடு, குறித்த கருத்தை ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(www.eelamalar.com)