ஆழிப்பேரலையையும் வென்றான் சமர்களநாயகன்..!! –லீமா…!!

ஆழிப்பேரலையின்போது பால்ராஜ் அண்ணா வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார்.திடீரென கடல் உள்வாங்கப்பட்டு வழமைக்கு மாறாக அலைகள் உயர்ந்து வேகமாக வருவதைப் பார்த்த பால்ராஜ் அண்ணா ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து சுதாரித்துக்கொண்டு உடனடியாக வானத்தை நோக்கி சுடும்மாறு போராளிகளுக்கு அவசர கட்டளையிட்டார் திடீரென துப்பாக்கி சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதைக்கண்டு ஓடித்தப்பித்தனர் இதனால் பலபேர் காப்பாற்றபட்டனர்.

அதேவேளை கடற்கரை முகாமில் நின்றிருந்த பால்ராஜ் அண்ணா கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார்.ஒன்றா இரண்டா எத்தனைமுறை எத்தனை சந்தர்ப்பங்களில் சாவின் வாயில்வரை சென்று மீண்டிருப்பார் எந்த சந்தர்ப்பத்திலும் சாவு அவரை வெற்றிகொள்ள முடியவில்லையே.

ஒரு இராணுவ முகாமை தாக்கியழிக்கும் முடிவை தலைவர் எடுத்தபிறகு வேவு தரவுகளின் அடிப்படையில் பாரதூரமான சகல விடயங்களையும் அலசி ஆராய்ந்து தலைவரால் தாக்குதல் திட்டம் வகுக்கப்பட்டு
அதன்படி தாக்குதலை தொடுக்கும்போது திட்டமிட்டபடியே போராளிகளின் அர்பணிப்புடன் அனைத்தும் நடந்துவிட்டால் அந்த வெற்றியில் வியப்படைய ஏதுமில்லை.ஆனால் தாக்குதல் திட்டதிற்கு அப்பாற்பட்டு எதிர்பாராத களமுனை இறுக்கம் முற்று முழுதான சுற்றிவளைப்பு நாங்கள் எதிர்பாராத எதிரியின் திடிர் திருப்பம் இப்படியான மிகவும் இறுக்கமான இக்காட்டான சூழ்நிலைகளில் களநிலையை தலைவருக்கு அறிவித்துவிட்டு தலைவரின் பதிலுக்காக காத்திராமல் அந்த சூழ்நிலையை புன்னகையுடன் முறியடித்து முன்னேறுவதில் லீமா அண்ணைக்கு நிகரில்லை.

களமுனைகளில் சிங்களபடைகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் ஈழமக்கள் மனதில் என்றுமே சமர்கள நாயகனாகவும் வாழ்ந்தவர்.எல்லோருக்கும் எல்லா சிறப்பும் வாய்த்துவிடாது அதில் தமிழர் வீரத்தின் மணிமகுடம் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

“என்ன தம்பி சோர்ந்து போய் நிக்கிறே ஒருக்கா வீட்டை போயிட்டு வாறியளா”

என்று பால்ராஜ் அண்ணை போராளியள் மீது காட்டும் பரிவுக்கு உயிரை உருவி அவர் கையில் கொடுக்க தோன்றும்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.