இக்கொடி இனி இறங்காது 
ஈழம் அடையாமல் உறங்காது 

மெல்ல அசைகிறது
எம் தேசிய கொடி
தடைகளை கடந்து நடைப்போடுகிறது
எம் இனத்தின் கொடி
விடுதலை என்னும் விடைத் தேடி 
சூழ்ச்சியால் வீழ்ந்த கொடி
மீண்டும் சுதந்திரமாக
பறக்குது கொடி

இக்கொடி இனி இறங்காது
ஈழம் அடையாமல் உறங்காது
கரிகாலனின் வருகைக்கான
காலம் நெருங்கி விட்டது
புகை நடுவில் நெருப்பிருக்கும்
புலிகள் மனதில் ஈழம் என்ற நினைவிருக்கும்
தீயாளும் அழியாது தீமையாளும் அழியாது

உறங்கிவிட்டோம் என எண்ணாதே
உரமேற்றுகிறோம் என்பதை மறவாதே
திக்கெட்டும் பிரிந்து விட்டோம் என
எண்ணாதே
தீர்த்துகட்டும் திட்டத்தில் இருக்கிறோம்
என்பதை மறவாதே
இனி வாங்காது எம் கால்கள் பின்
ஈழமே எங்களுக்கான அடையாள மண் ..!!!

தமிழ்தேசிய எழுச்சி கவிஞர்

செ.அ நிலா பிரியன்