இணையில்லா ஈழக்கவிக்கு 
இனிய அகவை நல் வாழ்த்துக்கள்

கவிக்கோர் கவி படிக்கின்றேன்
கண்ணீர் கோடுகளை 
கவிதையில் வடித்த
எம் ஈழப்புலவனே

விடுதலை வேட்க்கையை
பாடல்கள் ஆக்கி
நெஞ்சுரம் சேர்த்த
ஈழ கவிஞ்னே

வலிகளை மறந்து
சிறகுகள் விரிக்க
வீரியம் தந்த
புதுக்கவியே

சிறைதனை உடைத்து
சிந்திக்க வைத்து
காவியம் படைத்த
பெரும் கவியே

வலிகளும் வரிகளானது
கவியென்னும் ஏட்டில்
ஈழ காவியம் கல்வெட்டானது
விடுதலை தாகத்திலே
இன்னல்களை இன்புற
எடுத்துரைத்த இரத்தினமே

இணையில்லா ஈழக்கவிக்கு
இனிய அகவை நல் வாழ்த்துக்கள்

=சிவா TE=