வான்புலிகள்

காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்

மீள்பதிவு.

தடைகளும் சாவால்களும் சுமைகளும் சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த விடுதலைப் பயணத்தில் மாபெரும் அத்தியாயம்.விடுதலைப் போராட்டத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தும் எம் தேச பெருந்தலைவனின் சீரிய சிந்தனை வான் புலிகள்.”காற்றிலேறி விண்ணையும் சாடுவோம்”என்ற முழக்கத்தோடு களம் கண்ட வீர மறவர்கள்.

“புலிகளின்ர விமானம் பூ போட்டு பூஜையிடத்தான் பயன்படும் அது எங்களை ஒன்றும் செய்யாது”என்று ஏளனமாக சிரித்தான் ராஜபக்க்ஷே.புலிகளின் விமானம் தாக்குதலுக்கு புறப்பட்ட செய்தி அறிந்ததும் அலரி மாளிகையில் உள்ள பாதாள அறைக்குள் ஓடி ஒளிந்திருக்கின்றான்.

எதிரியின் இதய பகுதியான கொழும்பில் தாக்குதல் நடத்திவிட்டு சரியான இலக்கில்தான் தாக்குதல் நடத்தினோமா என்று மீண்டும்மொருறை வட்டமடித்து உறுதி செய்து கொண்டு தளம் திரும்பினர் வான்புலிகள்.புலிகளின் விமானத்தை நடுவானிலேயே வைத்து தாக்கியழிக்க புறப்பட்டன சிறீலாங்கவின் வான்படை. புலியை எங்க புலியின் நிழலை கூட நெருங்க முடியவில்லை சிங்களனால்.

இத்தனைக்கும் இந்தியா,பாகிஸ்தான்,சீனா கொடுத்த ரேடார்கள் அனைத்தும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு இரவு பகலாக வன்னியையே உற்று நோக்கி கொண்டிருந்தன அவைகளின் கண்ணில் மண்ணைதூவி வெறும் கைவிளக்கு வெளிச்சத்தில் விமானத்தை செலுத்தியவர்கள்தான் பிரபாகரன் பிள்ளைகள்.

புலிகளின் வளர்ச்சி படைகளப் பெருக்கம் அவர்கள் அடைந்த போர்கள வெற்றிகள் சிங்களனின் கண்ணை உறுத்தினதோ இல்லையோ இந்தியாவின் கண்ணை ரொம்பவே உறுத்தியது.புலிகளை அழித்தொழிக்க சிறீலங்கா அரசாங்கத்திற்கு இத்தனை உதவிகள் செய்தும்,ஆயுதங்களை வாரி வாரி கொடுத்தும்,இந்திய மண்ணிலையே சிறீலங்கா ஆமிக்கு விதவிதமான பயிற்சிகள் கொடுத்தும்,இத்தனை தடைகள் போட்டும்,தீவீரவாதி முத்திரையை குத்தியும், இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தும், இந்திய ஊடகங்களில் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் வெற்றிகண்டும்,இவ்வளத்தையும் செய்தும் இத்தனையையும் மீறி பிரபாகரன் என்ற ஒற்றை மனிதன் இவ்வளவையும் சாதித்து விட்டானே,ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டமைத்து நிழல் அரசாங்கத்தையே நிறுவி விட்டானே,நாளைக்கு தமிழீழம் என்ற தனிநாடு அமைந்து விட்டால் தன்னையும் விஞ்சி தெற்காசியவிலையே முண்ணுதரனமான நாடாக தமிழீழத்தை கட்டியெழுப்பி விடுவானோ என்ற பொறாமை வயிற்றெரிச்சல் இந்திய மத்திய அரசுக்கு,அப்படி தனிநாடு அமைந்துவிட்டால் தாய் தமிழ்நாட்டு மக்களுக்கு புதுதெம்பு பிறந்து விடுமே என்ற குரூர எண்ணம்.எங்களை இல்லாதொழிப்பதில் சிங்களனை விட அதிக ஆர்வம் கொண்டது இந்திய மத்திய அரசாங்கம்தான்.

தடை
தடை
தடை
என்று நீங்க போட்ட அத்தனை தடைகளையும் வரிகளாக்கி,வரிகளை உடைகளாக்கி அணிந்துகொண்டு காரியம் சாதித்தவன்தான் பிரபாகரனென்ர தமிழீழ விடுதலைப் புலிகளின் தாய்புலி. இந்நேரத்திற்கு நாடு அடைந்திருப்போமானால் தெற்காசியாவே எம் தேச பெருந்தலைவனின் விரலசைவிற்க்கு காத்திருந்திருக்கும்.ஆயினும் என்ன “இன்னும் இருக்கு மிச்சம் எம் தங்க தலைவன் தொடுவான் உச்சம்”

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.
-பிரபாசெழியன்.