கார்த்திகை மாதத்தில் கார்த்திகை பூ பூப்பது போல் எம்மவர் சிலருக்கு கார்த்திகை மாதத்தில் மட்டும் தாயக உணர்வு வருவது தான் இப்போது அதிகம் நடக்கின்றது…..!!!

எம்மர்களில் சிலருக்கு ஈழத்தின் பற்று கார்த்திகை மாதத்தில் மாவீரர் நாள் வரும் போது மட்டும் உணர்வு வரும். மாவீரர் நாள் அன்று மாவீரர்களுக்கு விளக்கேற்றி விட்டு வீடு போனார்கள் என்றால் அவர்களை கான கிடைப்பதில்லை. மறுபடியும் அவர்களை அடுத்த மாவீரர் நாள் நெருங்கும் போது ஒரு மட்டும் பார்கலாம். அவர்கள் கார்த்திகை பூக்கள் போல் உள்ளனர் கார்த்திகை மாதத்தில் பூப்பார்கள் மற்றைய மாதத்தில் அவர்களை கான முடியாது இப்படி இருந்தால் எப்படி எமக்கு ஈழம் கிடைக்கும்….?

எமது வாழ்க்கைக்கு பணம் தேவைதான் அதைவிட எமது நாடு முக்கியம். மாற்றானின் நாடு எமது நாடு அல்ல அது எமக்கு விடுதியே என்பதை மறந்து விடாதீர்கள். விடுதியில் எத்தனை ஆண்டுகள் தான் வாழ போகின்றோம் சிந்தித்து செயல்படுங்கள் எம் தமிழ் உறவுகளே. யாரையும் குறை கூறவேண்டும் என்று நான் சொல்ல வில்லை நாம் இப்படி இருந்தால் எமக்காய் உயிர் குடுத்த மாவீரர்களின் கனவை எப்போது நாம் நிறைவேற்றுவது அவர்கள் குடும்பங்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய துரோகம் தான் இது.

அவர்கள் அவர்களின் பிள்ளைகளை நாட்டுக்காக விதைத்து விட்டு ஒரு நேர சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர் ஈழத்தில். அவர்களின் பாவம் எம்மை சும்மா விடாது என்பதை முதலில் நினைவில் வைத்திருக்க வேண்டும். உறவுகளே கார்த்திகை மாதத்தில் எமது மனங்களில் இருக்கும் உணர்வுகளை ஏனைய மாதங்களில் எமது மனதில் வைத்து செயல்படுவோம் என்றால் எமது தாயகத்தை மிக சுலபமாக அடைந்து விடலாம்.

யார் மனதையும் காயப்படுத்த இதை நான் சொல்லவில்லை எம் இனம் எம் சனம் என்ற உரிமையோடு சொல்கின்றேன். போன காலங்களைப் போல் நாம் இனியும் இருக்காமல் எமக்கான இலக்கை நோக்கி பயனிப்போம்.

நன்றி.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

யாழ்காந் தமிழீழம்.

(www.eelamalar.com)