தமிழீழ தேசியக்கொடி

புலிக்கொடி…
தமிழ்குடி சிறக்கும்படி…
எம்தானைத்தலைவன்…
ஆணைப்படி ஆசைப்படி…
அவரின் எண்ணப்படி…
அமைந்தகொடி…

தர்மத்தின்படி…
நீதியின்படி…
நேர்மையின்படி…
வாய்மையின்படி…
தியாகத்தின்படி…
குருதியை கொடையாய் கொடுத்ததன்படி…
சிவந்தகொடி…

வீரத்தின்படி…
வெற்றியின்படி…
தமிழன் தன்மானம் காத்தபடி…
தமிழனை தலைநிமிர்த்தியபடி…
ஈழத்தமிழனின் கண்ணீரில் நனைந்தபடி…
தமிழன் வெற்றியில் திளைத்தபடி…
தமிழ்வீரத்தை பாருக்கு பறைசாற்றியபடி…
தமிழர் நிலத்தை ஆண்டகொடி…

அதர்மத்தை அழித்தபடி…
அக்கிரமங்களை அடயங்கியபடி…
மூத்தகுடி தமிழ்குடியின் உதிரத்தில் உதித்தகொடி…
அறத்தின் தோற்றமாய் தோன்றியகொடி…
அடிமையர் சீற்றமாய் திகழும்கொடி…
அடக்குமுறையாளர்களை எதிர்த்தபடி…
ஒடுக்குமுறையாளர்களை ஒடுக்கியபடி.
தமிழீழ தேசத்தில் பறந்தகொடி…

தமிழர் நெஞ்சில் நிலைத்தபடி…
வெற்றிகளை குவித்தபடி…
வீணர்களை வீழ்த்தியபடி…
கோணமலை கோட்டையில் பறக்கும்கொடி…
தலைவன் பிரபா வழிகாட்டலின்படி…
தமிழ்குடி சிறக்கும்படி…
ஆளட்டும் புலிக்கொடி….
இப்புவியில் சிறந்தகொடி…

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்