இயலாத ஒன்று இருக்காது எமக்கு..

ஈழமண்ணில் பிறந்து தேசிய தலைமகனின் வழிகாட்டுதலை உளமார ஏற்று சுதந்திரம்வேண்டி தாய்மண்ணை மீட்க எத்தனையாயிரம் மாவீரர்கள் களமாடி வீரச்சாவடைந்துவிட்டனர்.ஆனால் இப்படியொரு பாக்கியம் தங்களுக்கு அமையவில்லையே என்று தன்மானமும் இனமானமும் தன்னின பெருமையும் தலைவர் மீது பாசமும் கொண்டு ஏங்குவோர் பலர் இருக்கதான் செய்கின்றனர்.

குறிப்பாக தாய் தமிழகத்தில் இப்படியான இளைய தலைமுறை பிள்ளைகளின் ஆர்வம் அதிகரித்திருக்கின்றது.தேசியதலைவரை கடவுளுக்கு நிகராக போற்றுகின்றார்கள்.அவர்களின் அரசியல் பலம் நிச்சயம் வலுசேர்க்கும்.அதற்கு உதாரணம் இந்தியாவின் மிக வலிமையான பிரதமராக ராஜீவ்காந்தி இருந்தபோது அவரையும் மீறி எம் ஜீ ஆர் அவர்கள் செய்த உதவிகள் பெறுமதிமிக்கது.

தேசிய தலைவரின் வழிகாட்டுதலில் வாழ்வது களமாடுவது சாதிப்பது அதுவொரு வாழ்நாள் வரம்.தேசிய தலைவரின் வழிகாட்டுதலில் வாழ்ந்தால் புல்லுக்கும் பூண்டுக்கும்கூட இனமான உணர்வு பிறக்கும்.முடவனும்கூட சாதிக்க துடிப்பான் அண்ணணின் அரவணைப்பில் வாழ்ந்தால்.சாதிக்ககூடிய உத்வேகம் இயல்பாகவே வந்துவிடும்.அவரொரு மனிதர் தலைவர் வழிகாட்டி என்பவற்றை கடந்து அவரொரு பொக்கிஷம்.

இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல அம்மாவை துணைக்கழைத்த அங்கயற்கண்ணி அக்காவை.
326.04 அடி நீளமும்,51.02அடி அகலமும், 1300தொன் எடையை கொள்க்கூடியதும்,
அதிநவீன ராடர் கருவிகள் பொருத்தபட்ட நடமாடும் கடற்படை தலைமையகத்தை தனியொருத்தியாக 17கடல் மைக்கள் எறத்தாழ 35கிலோமீற்றர்கள் கடலில் நீந்தி கடந்து இலக்கை வெற்றிகரமாக தாக்கியழித்து சாதனை படைத்தார் என்றால்
தேசிய தலைவரின் வழிகாட்டுதலை உளப்பூர்வமாக ஏற்றதனால்தான் அது சாத்தியமாகியது.அசாத்தியங்களை சாத்தியப்படுத்தினார் தலைவர்.

ஒவ்வொருவரிடத்தும் ஒருதனித்திறமை நிச்சயமாக இருக்கும்.அத்திறமையை நுணுக்கமாக இனங்கண்டு உன்னால் இயலும் என்று உத்வேகத்தை அளிக்ககூடிய தலைமை கொடையாக பெற்றிருக்கிறது தமிழினம்.

உலகெங்கும் பரவி வாழும் தன்மானத் தமிழர்கள் யாவரும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி ஒற்றை தலைமையின் கீழ்அணிதிரண்டு ஒரு புள்ளியில் இணைந்தால் விடியலின் எல்லை வெகுதூரத்தில் இல்லை.

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்.
பிரபாசெழியன்.