தமிழீழ விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டி திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை பற்றிய சிறு விபரணத் தொகுப்பு…!

1993 ஆம் ஆண்டு 06 ஆம் மாதம் யாழ்மாவட்டத் தாக்குதலனியிலிருந்த ஒரு தொகைப் போராளிகள் டொச்சன் முகாமில் ஒன்றாக்கப்பட்டு மன்னாரில் இராணுவம் பாரிய முன்னேற்ற நடவடிக்கை ஒன்றுக்குத் தயாராகவுள்ளதாகவும் அங்கு செல்ல பணிக்கப்பட்டது .அதற்கமைவாக யாழ்மாவட்டத் தாக்குதல் படையணியிலிருந்த போராளிகளிள் ஒரு தொகுதி அணியினர் மேஜர் குமரன் தலைமையில் அன்று மாலை கச்சாயில் உள்ள இம்ரான் பாண்டியன் படையணியினரின் முகாமுக்குச் சென்று அங்கிருந்து கிளாலிக் கடற்கரைக்குச் சென்றனர்.

அங்கு தளபதி பால்ராஜ் அவர்களும் தளபதி சூசை அவர்களும்.வந்து வழியனுப்பி வைக்க அணிகள் கிளாலி கடல் நீரேரி ஊடாக வன்னிக்கு சென்றடைந்து.அதில் ஒரு படகில் சென்ற அணி இடம்மாறி சென்று மீண்டுவந்தது வேறுகதை… வன்னியிலிருந்து மணலாற்றுக் காட்டிற்குச் சென்ற அணிகளை அங்கு தளபதி சொர்ணம் அவர்கள் பயிற்சி சம்பந்தமாக மட்டுமே கதைத்தார்.பயிற்சிகள் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஆண்டாண்குளவெட்டையில் முதுபெரும் தளபதி கேணல் கிட்டண்ணா வீரச்சாவடைவதற்க்கு முன்னர் அனுப்பியிருந்த பயிற்சித்திட்டத்தின் அடிப்படையில் இரவைப் பகலாக்கி அதாவது மாலையில் பயிற்சிகள் தொடங்கி விடிய முடிவடையும்.இப் பயிற்சிகளை தளபதிகளான அன்பு சொர்ணம் பால்ராஜ் ஆகியோர் அடிக்கடி சென்று பார்வையிட்டதுடன் ஆலோசனைகளையும் வழங்கினாா்கள்.பயிற்சிகள்.நிறுத்தப்பட்டு தாக்குதலுக்கான திட்டம் விளங்கப்படுத்தப்பட்டன .தாக்குதல் திட்டம் விளங்கப்படுத்தப்பட்ட பின்னர் தான் பெரும்பாலானவர்களுக்குத் தெரியும் மண்கிண்டிமலை இராணுவமுகாமைத்தான் தாக்கப் போகிறோம் என்று அவ்வளவுக்கு இரகசியம் காக்கப்பட்டது .இச் சமர் மண்கிண்டிமலை இராணுவமுகாம் மற்றும் மலை மினிமுகாம் மற்றும் கோட்டைக்கேனி இராணுவமுகாமிலிருந்து இவர்க்களுக்கு உதவி வந்தால் அதைத் தடுப்பதற்க்கு ஒரு அணி.முறையே மண்கிண்டிமலை இராணுவமுகாம் தாக்குதலை தளபதி அன்பு அவர்கள் அணிகளுடன் உட்சென்று வழிநடாத்த மலை மினிமுகாமை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியனருடன் வன்னி மாவட்டத் தாக்குதலனியும் தாக்கின .கோட்டைக்கேணி சமரை யாழ்மாவட்டத் தாக்குதலனியும் மகளிர் அணியும். வன்னி மாவட்டத் தாக்குதலனியும் இம்ரான் பாண்டியன் படையணியும் பங்குபற்ற இத்தாக்குதல்கள் 25.07.1993 நடைபெற்றது இவ்அனைத்து தாக்குதல்களிலும் மணலாற்றுப் படையணியினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும் அதாவது தாக்குதலில் பங்குபற்றியதிலிருந்து
தாக்குதலிற்காகச் சென்ற அணைத்து அ ணிகளுக்குமான சமையலாகிலும் சரி தங்குமிடமாகிலும் சரி தாக்குதலிற்கான அணிகளை சரியான நேரத்தில் சரியான இடத்திற்க்கு கூட்டி சென்றதிலும் இப் படையணியினர் செவ்வனவே செய்திருந்தார்கள் இத்தாக்குல்கள் அனைத்தையும் தளபதி சொர்ணம் அவர்களும் தளபதி பால்ராஜ் அவர்களும் வழி நடாத்தினார்கள்.இது வே இதயபூமி 01 என தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது இராணுவ நடவடிக்கையாகும் . இவ் வெற்றிகரத் தாக்குதல்களில் பத்துப் போராளிகள் வீரச்சாவடைந்தார்கள்.திண்ணவேலியில் பாடசாலைக்குச் சென்ற பாடசாலை மாணவர்கள்மீது தாக்குதல் நடாத்தி சிங்கள விமனப்படை தனது பழியைத் தீர்த்துக்கொண்டது .

இந்த சமரிலே வீரகாவியமான அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவு கூர்ந்து நெஞ்சில் நிறுத்தி பூசிப்போமாக.

தாயக விடுதலைப் போராட்ட வரலாற்று சுவடுகளோடு “ராஜ் ஈழம்”

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”