இராணுவத்துடனான நேரடிச் சண்டையில் உயிர் தப்பிய தலைவர்

13903180_655392054626507_224004137915603678_nவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தலைவர் நேரடியாக பங்குபெற்ற ஒரு சண்டையில் மயிரிழையில் உயிர் தப்பினார் தலைவர் அந்த சம்பவம் குறித்து அண்ணண்…

யாழ் திருநெல்வேலி சந்தியில் இரவில் ரோந்து போகும் இராணுவ வாகனங்களை குறிவைத்து அந்த தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது அதில் நான், செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன், விக்டர், சந்தோஷம் உட்பட பதினான்கு பேர் நிண்டனாங்கள். நான் ராணுவத்தை நோக்கி சுட்டுவிட்டு எனது துப்பாக்கியின் ரவைகள் தீர்ந்தபடியால் நான் குனிந்து ரவைகளை போட்டுக்கொண்டிருந்தேன். நான் குனிந்த நிலையில் இருந்த போது எனக்கு மேலே வெளிச்சம் தெறிந்தது. நான் நினைத்தேன் எங்கள் அணியின் மற்றொரு போராளியினுடைய துப்பாக்கியினது ரவைகள் எதிரியை நோக்கில் செல்வதில் ஏற்படுகின்ற வெளிச்சம் என்று. அதற்க்குள் நான் துப்பாக்கியின் ரவைகளை நிரப்பிக்கொண்டு மறுபடியும் தாக்கினேன்….

அடுத்தநாள் வந்து நாங்கள் நின்று தாக்குதல் நடத்திய இடத்தை பார்க்கும் போது நான் நின்ற இடத்தில் நிறைய குண்டுகள் கிடந்தன. நான் அப்போது துப்பாக்கி ரவைகளை நிரப்ப நான் குனியாமல் இருந்திருந்தால் அன்றே நான் இறந்திருப்பேன். இப்படி பலமுறை பல சம்பவங்களில் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டிருக்கின்றேன். ஒவ்வொரு முறையும் மீளும்போதும் இந்த இனத்திற்க்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் பாக்கியிருக்கின்றது என்று நினைத்துக்கொள்வேன்

தேசியத்தலைவர்.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-பிரபாசெழியன்.

(www.eelamalar.com)