20101

இராவணன் ஆண்ட தீவடா இலங்கை
அது சிங்களத்தீவாய் ஆகும் முன்னே உடைப்பாய் விலங்கை

எல்லாளன் ஆண்டதடா
எங்களேற்றம் அந்த எழுச்சியில்
என்றுமில்லை மாற்றம்

ஈழத்தை இழந்தோர் குடிமை
இம்மண்ணில் வாழ்ந்தால்
அவன் பெயர் அடிமை

காலனுக்கே வரும்நாள் ஓலைக்
கொடுத்தான் கரும்புலி
கரிகாலனை தலைவனாய் கொண்டான் போர்ப்புலி

ஈழத்தில் இன்னமும் உருளுதடா
தமிழன் தலை இதைபார்த்த பின்னும்
அமைதியாயிருந்தால் நீ தறுதலை

கொடு கொடு என்று யாசகம் கேட்க
சுகந்திரம்மென்ன கடலை வடையா
உளுந்தவடையா

எமது போராட்டத்தின் வெற்றி உலகத்தின் கைகளில் தங்கியிருக்கவில்லை
எமது கையில்
எமது பலத்தில்
எமது உறுதிபாட்டிலேயே
தங்கியிருக்கின்றது என்ற
பெருந்தலைவனின் சிந்தனைக்கு
செயல்வடிவம் கொடு

ஓன்றுசேர்
அர்பணி
ஆயுதம்செய்
பயிற்ச்சிசெய்
போராடு
தடையுடை
இலக்கையடை
வெற்றிபெறு
புலிக்கொடியேற்று

தமிழரின் தாகம் தமிழீழ தயாகம்

ஈழமலர் செய்திக்காக பிரபாசெழியன்.

(www.eelamalar.com)