யாழில் வெளியாகிறது எல்லைக் கிராமங்கள் பற்றிய ஆவணப்படம்

fotorcreatedயாழ் ஊடக அமையத்தினால் தயாரிக்கப்பட்ட “இருளுள் இதய பூமி” ஆவணப் படம் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் 03.30 மணி முதல் யாழ் ஊடகம் அமையம் அருகிலுள்ள கலைத் தூது மண்டபத்தில் இடம்பெற உள்ளது.

மணலாறு எல்லைக் கிராமங்கள் பற்றிய உண்மையினை வெளிக் கொணரும் வகையில் அமைந்த குறித்த ஆவணப் படத்தின் வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு குறித்த ஊடக அமையம் வேண்டுகோள் விடுக்கின்றது. வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் நோக்கோடு முல்லைத்தீவின் தென்கரையில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நிலத்திற்கு உரித்தைக் கொண்ட தமிழர்களின் குரல்கள் அடங்கிய ஆவணப் படமாக இந்தப் படம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

15319241_10154415242573778_8592822556485960703_n

(www.eelamalar.com)