“இறந்துபோனோரின் அமைதியைக் கெடுத்தவர்கள் இறவாதோருக்கும் நிம்மதியை அளிக்கமாட்டார்கள்”

“இனத்துவேசப் பகை உணர்வினால் தூண்டப்பட்ட பேரினவாதம் தமிழினத்தால் என்றுமே மன்னிக்கமுடியாத ஒரு படுபாதாகச் செயலில் இறங்கியது. யாழ் குடாநாடு எதிரிப்படைகளின் கைகளில் வீழ்ந்தபோது இந்த வேதனைக்குரிய சம்பவம் நடைபெற்றது.

தமிழீழத்தாயின் மடியில் நித்திய உறக்கத்தில் ஆழ்ந்திருந்த எம்மினிய மாவீரர்களின் ஆன்ம அமைதி எதிரியால் குலைக்கப்பட்டது அவர்களின் கல்லறைகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அவர்களது துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டன. அவர்களது நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டன. புனிதர்களாக சரித்திர நாயகர்களாக தேசிய வீரர்களாய் தமிழீழ மக்களால் பூசிக்கப்படும் மாவீரர்களின் புனிதத் தலங்களான துயிலும் இல்லங்களை சிதைத்தழித்த இச் செயலை மிகவும் அநாகரிகமான கீழ்த்தரமான இழிசெயல் என்றே தான் கூறுவேன்”.

“ஆக்கிரமிப்பு இராணுவத்தின் அடாவடித்தனமான இச் செயலை சிறுமைப்படுத்திவிட முடியாது. இது மிகவும் பாரதூரமான பயங்கரவாதச்செயல். தமிழீழத்தின் தேசிய ஆன்மாவில் நீங்காத கறை ஏற்படுத்திய இந்த அவச்செயலுக்கு சிங்கள பேரினவாத அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இந்தப் பண்பற்ற செயல் ஒரு உண்மையைப் பகிர்கின்றது. அதாவது சிங்கள தேசத்தை ஆண்டவரும் இனவாத ஆட்சியாளர்கள் தமிழறிகளின் உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பளிக்கப்போவதில்லை. அத்துடன் தமிழ்மக்களின் தேசிய அபிலாசைகளை புரிந்து அவர்களுக்கு நீதியும் வழங்கப்போவதில்லை. இறந்துபோனோரின் அமைதியைக் கெடுத்தவர்கள் இறவாதோருக்கும் நிம்மதியைக் கொடுப்பார்களென நான் கருதவில்லை”.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 1997ம் ஆண்டு மாவீரர்நாள் செய்தியிலிருந்து…………