இறுதிப்போரில் பங்களித்த நாடுகள்; பட்டியலிட்டார் மஹிந்த!

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யத்தத்தின் போது, இலங்கைக்கு வழங்க முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கியதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் தனக்காக மேற்கொள்ளப்பட்டதல்ல எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பலரை விடுதலைப் புலிகள் கொலை செய்திருந்தமையால், அந்த அமைப்பை தோற்கடிக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்ததாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனா, பாகிஸ்தான் மட்டுமல்ல பிரித்தானிய, அமெரிக்க போன்ற நாடுகளும் யுத்தத்தின் போது இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(www.eelamalar.com)