இலங்கையில் இப்படியும் அப்படியும் தான் நடக்கும்!

இலங்கை ஒரு நாடு. ஒரே சட்டம் நல்லாட்சி அரசும் இன பாகுபாடுயின்றி சகலரையும் சமமாக நடத்துகின்றது என்பதெல்லாம் நாள் தோரும் வரும்  ஊடக செய்திகளேயன்றி இங்கு நடப்பதோ சிறுபான்மை மக்களுக்கு பாகுபாடான செயலேயாகும்.

காவல் படையானாலும் சரி இராணுவமாக இருந்தாலும் சரி தமிழ் மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றது என்பதற்கு பல ஆதாரங்களை நாம் கூறலாம் இருந்தும் இரண்டு விடயங்களை குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

  1. அரச ஊழியர்களை அவமதித்ததற்காக  தென்பகுதியில் பாரிய போராட்டமே நடைப்பெற்றது ஆனால் மட்டக்களப்பில் புத்த பிக்கு ஒருவர் கிராம சேவையாளரை காவல் துறையினர் முன்பே அருவருக்க தக்க முறையில் வார்த்தைகளை கூறினார் நடந்தது என்ன ?
  2. தற்பொழுது கேப்பாப்புலவு மக்களின் காணி உரிமை போராட்டத்தை படைகளைக்கொண்டு விரட்டப்பார்க்கும் நிலையையும் நேற்றைய தினம் கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளின் தடுமாற்றத்தையும் தொலைகாட்சிகளில் நேரடியாக பார்க்கும்போது  வடக்கில் தங்களின் சொந்தக்காணிகளுக்காக போராட்டத்தை நடாத்தும்  மக்களை துப்பாக்கி முனையில் விரட்ட அரசு எடுக்கும் நடவடிக்கை நீதியானதா ? என்று தமிழ் மக்கள் புலம்புகின்றார்கள்.அம்பாந்தோட்டையிலோ காணி சுவீகரிகப்போவதாக கூறப்பட்டதுமே சிங்கள மக்களும் பாராளுமன்ற பிரதிநிதிகளும் வீதியில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் ஆனால் தமிழ் பிரதிநிதிகளோ….?

இவ்வாறு இலங்கை அரசு நடப்பதற்கு பின்னனியில் தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகள் இருக்கின்றமையே காரணமாகும் என்று 19 நாட்களாக போராடும் மக்கள் கண்ணீர்விட்டு கருத்தை கூறுகின்றார்கள்.

தமிழ் பாராளுமன்ற பிரதிநிதிகளே இவர்களின் காணிகளை இராணுவத்திடமிருந்து பெற்று கொடுக்க  இன்னும் தயக்கம் காட்டுவது புரியாத புதிராக இருக்கின்றது.