இலங்கை பெயரழித்து
ஈழம் என எழுந்து வா….

அழுகை விட்டொழித்து
ஆர்ப்பரித்து எழுந்து வா….
அன்னைத் தமிழ் காக்க
ஆர்வமுடன் எழுந்து வா….
ஆழிப் பேரலையாய்
ஆற்றாரறுக்க எழுந்து வா….
ஆன்ற தமிழினமே
அடல் காண எழுந்து வா….
இனமே கொலையுண்ட
இந்நாள் என எழுந்து வா….
இலங்கை பெயரழித்து
ஈழம் என எழுந்து வா….
ஈகைப் பெருமறவர்
ஈசன் என எழுந்து வா….
ஈயுவன் வழித்தோன்றல்
ஈர்ந்தமிழா எழுந்து வா….
உண்மைத் தமிழன் எனில்
ஊக்கமுடன் எழுந்து வா….
உசுப்பி பறை கொட்டி
உலகுணர்த்த எழுந்து வா….
ஊளன் பல் உடைக்க
உயர்குடியே எழுந்து வா….
ஊரி ஒலி எழுப்பி
உரியவனாய் எழுந்து வா….
எதிரிப் படை அழித்தோர்
எந்தை என எழுந்துவா….
எளியோன் தமிழன் இல்லை
எடுத்துரைக்க எழுந்து வா….
ஏதிலி நிலை ஒழிக்க
ஏக்கமுடன் எழுந்து வா….
ஏகிடும் ஓர் வழியே
எமதீழம் எழுந்து வா….
ஐந்நிலத் தமிழ் குலமே
ஐயமின்றி எழுந்து வா….
ஐங்குரவர் போற்றிடவே
ஐக்கியமாய் எழுந்து வா….
ஒழித்தவன் தமிழினத்தை
ஒடுக்கிடவே எழுந்து வா….
ஒல்லாமை பேரினத்தை
ஒதுக்கிடவே எழுந்து வா….
ஓயா தலைத் தலைவன்
ஓங்கிடவே எழுந்து வா….
ஓம்பிட மாவீரர்
ஓர்மையொடு எழுந்து வா….
ஔவைக் குடிசிறக்க
ஔடதமே எழுந்து வா….
ஔவியப் பக்சே குடி
ஔவிட எழுந்து வா….
ஃ ஆயுத வீரியத்தை
ஃ ஆய்ந்திடவே எழுந்து வா….
ஃ ஆயுதமோ அறிவாயுதமோ