ஈழப்போரும் எமது ஆயுதவாழ்வும்.

போராடினால் உயிர் போகும் என்று நாங்கள் நன்கு அறிவோம் நாம் போராடியது எங்களுக்காகவல்ல எமது வருங்கால சந்ததியினருக்காகவே எமது உயிரினை கொடுத்து நாங்கள் போராடியது எமது சந்ததிகள் யாருக்கும் அடிமையின்றி சுகந்திரமாகவும் சுவேட்ச்சையுடனும் வாழவேண்டும் என்பதற்காகவே போரிட ஆயுதம் ஏந்தினோமே தவிர தன்னலத்திற்காகவும் எங்கள் ஒவ்வொருவருடைய சுயநலத்திற்காகவுமல்ல.

எம் மக்கள் எமது மண் அந்நிய சக்திகளின் கீழ் அடிபணிந்து போய்விடக்கூடாது என்பதற்காகவே ஆயுதம் ஏந்தி போராடினோம் எமது அபிலாசைகளை வென்றிடவே கிழக்கின் விடியலைப்போல் எம் தேசமும் விடிந்திட வேண்டும் என்பதற்காகவே உறவுகளை பிரிந்து உதிரம் சிந்தி வாழ்வின் சுகங்களை மறந்து போராடினோம்.

எம் மக்கள் சொந்த ஊரிலே நிம்மதியாகவும் எந்தவொரு இடையூறுகளுமின்றி வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே எங்கள் உடலினுள் வெடி சுமந்து நடந்தோம் சொந்த தேசத்திலே அகதிகள் ஆகினோம் வந்தவர்கள் எல்லாம் எம் மக்களை வதைத்தனர் மக்களின் கண்ணீரும் செந்நீரும் கண்டுமே ஆயுத போராட்ட வரலாறில் நிலையானோம்.

நாளும் பொழுதும் இனவாத சக்திகளினால் மடியும் உயிர்களை கண்டுமே வல்லமை கொண்ட தலைவனின் பின்னே அணிவகுத்து சென்றோமே தவிர தனிப்பட்ட விரோதத்திற்கு பலி தீர்க்க ஆயுதம் ஏந்தவில்லை மக்களைக்காக்கவே போராட்ட களங்களில் ஆயுதத்துடன் நிலையானோம் வந்தவர்கள் எல்லாம் வாழ்ந்தவனை வதைக்க வாழ்வியல் மாற்றவே ஆயுதம் ஏந்தினோம்.

எங்களின் ஆயுதம் மறுபடி பேசும் நீங்கள் ஆடிய கூத்து அடங்கியே போகும் எங்களின் தேசத்தில் விடிவெள்ளி பூக்கும் எதிரியே உங்களின் தேசமும் எங்களின் காலிலே பணியும்.

=சிவா TE=