Fotor121113087

ஈழம் எங்கள் மூச்சாக
மரணம் எங்கள் மண்ணுக்காக
விடுதலை எங்கள் சந்ததிக்காக
இலட்சிய உறுதியுடன் எங்கள் விடுதலைப் பணி தொடர்கிறது

eelamalar

தேசத்தின் குரல்
தமிழீழ தேசத்தின்
விடியலின் குரல்

விடுதலையின் பாதையில்
தமிழீழ விடுதலைப் புலிகளின்
அரசியல் மன்னவனே-அகிலமே உன் பேச்சுக்கு தஞ்சமே

பாலா அண்ணனே
எங்கள் மண் போற்றும் வல்லவனே
தேசம் கடந்து நீர் வாழ்ந்தாலும்
தேசியப்பணியில் அயராது,ஓயாது
இறுதி மூச்சடங்கும் வரையிலும் ஈழக்கனவினை சுமந்து வீழ்ந்தீரே
தேசத்தின் குரலாய் எழுந்தீரே-எங்கள் பாலா அண்ணனே

அரசியலின் ஆசானே
முடிச்சுக்கள் அவிழ்த்திடும் தூயவனே
வஞ்சகமாய் தின்றதுவோ நோய்
கால தேவதை உம்மை வேகமாக ஏன் அழைத்தாலோ?

கொஞ்சம்,கொஞ்சமாய் இறக்கையிலும்
ஈழவிதை தூவினாயே
புலம்பெயர் தமிழருக்கு உணர்வுத்தீயாய் எரிந்தாயே
உம்மை இழந்து அனாதைகளாய் போனோம்
சர்வதேச கண்களிலே ஏதிலிகளாய் வாழ்கிறோம்
உலகத்தின் வாயடைத்த ஈழத்தின் அரசியல் நாயகனே-எங்கள் பயணங்கள் தொடர்கிறது…

ஈழம் எங்கள் மூச்சாக
மரணம் எங்கள் மண்ணுக்காக
விடுதலை எங்கள் சந்ததிக்காக
இலட்சிய உறுதியுடன் எங்கள் விடுதலைப் பணி தொடர்கிறது,தொடர்கிறது.

மூடிகள் புலனாய்வின் முகவரிகள்
தமிழீழம்.

(www.eelamalar.com)