தமிழர் என்ற பெயரெமக்கு
அகிலம் எங்கும் சொல்லிவிடு

ஈழம் எந்தன் தாய்நாடு
வீரம் தியாகம் இரு கண்கள்
தமிழன் என்ற பெயரெனக்கு
அகிலம் எங்கும் சொல்லிவிடு
அலைகடல் சூழ்ந்தது எம் நாடு

மலையுடன் நதியும் சூழ்ந்திருக்கும்
அருவிகள் குளங்கள் நீர்தருமாம்
குருவிகள் பறவைகள் வாழ்ந்திடுமாம்
ஈழம் எங்கள் தாய்நாடு
தியாகம் எங்கள் பண்பாடு

கோணமலை தான் தலைநகரம்
மாநிலங்கள் இருபதுண்டாம்
புத்தளம் சிலாபம் குச்சவெளி
மாங்குளம் மற்றும் பூநகரி
மாந்தை வாகரை மூதூர்
நல்லுார் வரணி கரைச்சி
முல்லைத்தீவுடன் வவுனியா
பொத்துவில் மடு வெல்லாவெளி
அறுவாக்காட்டுடன் இருபது

சுதந்திரக்காற்று வீசுதிங்கே
சமத்துவம் பேசுவர் மக்களெல்லாம்
கல்வியும் செல்வமும் பெருகுதிங்கே
செந்தமிழ் நாதம் ஒலிக்குதெங்கும்
ஈழம் எங்கள் தாய்நாடு
யாகம் வீரம் எம் கண்கள்
தமிழர் என்ற பெயரெமக்கு
அகிலம் எங்கும் சொல்லிவிடு

கவியாக்கம் :மாதினி சிறீதரன்
பெதெஸ்டா -ஐக்கிய அமேரிக்கா
வெளியீடு:எரிமலை இதழ்