fotor0711111134

ஈழ வரைபடம்
விழிகளில் வரைந்தவர்

ஈழ வரைபடம்
விழிகளில் வரைந்தவர்
தோளில் சுமையுடன்
போர்க்களம் விரைந்தனர்
கரிகால சேனையின்
காவிய நாயகர்கள்
பகையினை விரட்டவே

பாசங்கள் மறந்தவர்
மறதமிழ் வேங்கையாய்
மண்காக்க நடந்தவர்
மார்பிலே குண்டேந்தி
விழி மூடி போனவர்
சந்தன பேழைகளில்
உறங்கிடும் வீரர்கள்

சாவிலும் உயிர் வாழும்
சரித்திர வேங்கைகள்
மண்ணுக்காய் மரணித்த
எங்கள் மாவீரர்
ஈழ தாய் மடியில்
உறங்குகின்ற கண்மணிகளே

உங்கள் விழிகளை திறந்து
ஒரு முறை எங்களை பாருங்கள்
வீரர்களே மாவீரர்களே.

(www.eelamalar.com)