புலம்பெயர்ந்து வாழும் தாயின் ஏக்கம்..!!!

கடல் கடந்து வந்தாலும் பண்பாட்டை
மறந்துவிடாதீர்கள். தமிழ் கலாச்சாரத்தை அழித்துவிடாதீர்கள்.

தாலாட்டி சோறுட்டி பாசம் காட்டி அன்போடு வளர்த்தோம். யுத்தத்தால் எம் வாழ்வு சிதைந்தாலும் உங்களின் வாழ்வை மறந்ததில்லை.

நாங்கள் உண்ண உணவில்லை ஆனால் பால் கொடுக்க மறந்ததில்லை மார்பின் இரத்தத்தாலே பால் கொடுத்து வளர்த்தோம்.

கோர யுத்தத்தின் பிடியில் சிக்கி சிதைந்த போதிலும் அவர்களின் வாழ்வை நேசிக்கத் தவறியதில்லை.

நாங்கள் கண்ணுறங்கியதில்லை அவர்களின் தூக்கத்தை தொலைக்கவிட்டதில்லை.

தொலைத்த வாழ்வுத்தேடி வெளிநாடுவந்தோம் மகிழ்வாக வாழ வேண்டி நாங்கள் அல்ல எங்களின் பிள்ளைகளின் மகிழ்வான வாழ்வுக்காக.

உறவுகளைத் தொலைத்துவந்தோம் ஏக்கங்களைச் சுமந்துவந்தோம் எமது பண்பாட்டை மறந்துவரவில்லை சொல்லிக்கொடுக்கவும் மறந்ததும் இல்லை.

இன்று வந்த வெளிநாட்டு மோகத்தை ஏற்று எமது கலாச்சாரத்தை மிதிக்காதீர்கள்.உடலோடு உயிர் போல தமிழரோடு தமிழ் கலாச்சாரம் இருக்கவேண்டும்.

பெற்ற அன்னையின் அன்பை மறந்து தான் வெளிநாட்டு நாகரீகம் வேண்டுமா..????

அவர்கள் சிந்திய தியாகங்கள் உங்களின் நினைவில் இல்லாமல் போனதேனோ.???

போரிலே பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த உறவுகளைச் சற்றே சிந்தித்துப்பாருங்கள்.

அவர்களுக்கு கரம் கொடுப்பது உங்களின் தார்மீகக் கடமை என்பதை உணருங்கள்.

நாகரீகம் என்பது உடையிலும் கேவலமான செயலிலும் இல்லை உள்ளத்தின் தூய்மையில் இருக்கின்றது என்பதை உணருங்கள்.வாழ்வில் தூய்மையாக வாழுங்கள்.

கடல் கடந்து வந்தாலும் கலாச்சாரம் மாறமல் வாழுங்கள் எனக்காக சொல்லவில்லை எம் இன மக்களுக்காக சொல்கின்றோம்.

நான் பெற்ற செல்வங்களால் நான் பட்ட கஸ்டம் போதும் நீங்களும் அப்படி செய்துவிடாதீர்கள்.

கண்ணீரே கணக்கின்றது வார்த்தைகள் வரவில்லை போதுமடா இந்த வாழ்வு உங்களுக்காக நீங்கள் வாழுங்கள் தூய்மையாய் இருக்கவேண்டும் என்பதை மறவாமல் இருங்கள்.

உலகிற்கு நாகரீகத்தை கற்றுத்தந்தவர்கள் தமிழர்கள் அதை மறவாதீர்கள்.வெளிநாட்டு நாகரீகத்தை தவிருங்கள் ஒழுக்கமாக வாழுங்கள்.

இன்று தாயாக எனது வலி
நாளை உங்களுக்கும் புரியும் அப்போது ஏங்கிப் பலனில்லை இப்போதே மாறுங்கள்.

ஏடுத்துக்காட்டாக வாழுங்கள் ஏளனமாக வாழ்ந்துவிடாதீர்கள்.

கண்ணீடுடன் சொல்கின்றேன் உங்களின் தாயாக.

மாறுங்கள் மற்றவரையும் மாற்றுங்கள்.

-பார்த்தீ கிங்