உன் இரத்தம் ஈழமண்ணில் சிந்தியதால்தான்..! 
மு.வே.யோகேஸ்வரன்

பிரிகேடியர் சசிகுமார்..என்றால்…
மலை முகாமின் ஒன்பதாவதை நினைத்துப்
பார்க்கிறேன்..
பயிற்சிக்கு வரும்போது நீ ஓர்
பயந்தாங் கொள்ளி’…
பயிற்சி முடிந்து நாடு திரும்பியதும்..
பார்த்து விட்டாய் ஓர்நாள்
‘பஜிரோவில்’போகும்போது என்னை..
படீர்’ என்று பிரேக் போடு..
இறங்கிவந்து..
“அண்ணை எப்படி இருக்கிறீர்கள்”?-என்று என்னைக்
கட்டித் தழுவினாய்..

அட..அன்றுபோல் இன்றும்நீ
ஓர்
அழகான குழந்தைதான் எனக்கு!
ஆனால்..நீ
நாட்டில் புரிந்த
அரிய..பெரும் பணிகள்தான் உன்னை
ஓர்..
பிரிகேடியராக உயர்த்தி விட்டது..!

அண்ணையை இறுதிவரை முள்ளி வாய்க்காலில்
ஓர்..
அறுகம் புல்போல் ..உறுதியுடன்
அருகில் இருந்து காத்துவிட்டு..
தமிழ் ஈழ மண்ணில் சாய்ந்தாயே
சசிகுமார்..! எப்படி மறக்கும் உன் இனிய முகம்?
(வீரச் சாவு;15.5.2009)