உறங்காத கண்மணிகள் வேவுப்புலிகள்…!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணி இராணுவ புலனாய்வு போராளிகள்தான் இந்த உறங்காத கண்மணிகள்.விடுதலை அமைப்பு பெற்ற மிகப்பெரும் இராணுவ வெற்றிகளுக்கெல்லாம் இவர்களின் பங்கு மிக முக்கியமானது.இவர்களின்றி பெரும் வெற்றிகள் சாத்தியப்பட்டிருக்காது.நிலவு காயும் நாட்கள்தான் இவர்களின் பெளர்ணமி.கனத்த இரவுகளில் இவர்களுக்கு மட்டும் நூறு கண்கள் விழித்திருக்கும்.காற்றோடு காற்றாய் போவார்கள் கணப்பொழுதில் வெட்டிமறையும் மழை மின்னல்போல் எதிரியின் தளங்களை ஊடுருவி உட்புகுவார்கள்.

விடுதலை அமைப்பு பெற்ற இராணு வெற்றிகளுக்கெல்லாம் முக்கிய காரணம் அவர்களது மிக துல்லியமான திட்டமிடல் இந்த பிசிரற்ற திட்டமிடலுக்கு முழுக்க ஆதாரதுணையாய் நிற்பது உறங்காத கண்மணிகள் சேகரித்து கொண்டுவரும் உளவுதகவல்கள்தான்.இவர்களது வாழ்க்கை கற்பனை செய்துகூட பார்திட முடியாஒன்று.ஒரு இராணுவ முகாமை தாக்கியழிக்கும் முடிவை அண்ணை எடுத்தபின்னர் முதலில் புறப்படுவது இந்த வேவுபுலிகளே தாக்குதல் தொடங்குவதற்கு ஓராண்டு அல்லது ஆறெழு மாதங்களுக்கு முன்னரே இவர்களது பயணம் தொடங்கும்.

முட்கம்பி வேலிகள் கண்ணிவெடி வெளிகள்,கண்காணிப்பு கோபுரங்கள்,ஐம்பது மீட்டருக்கு ஒரு காவலரண் இவையனைத்தையும் கடந்துதான் ஒர் இரவுபொழுதில் உள்நுழைவார்கள்.உள்ளே சென்றவுடன் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் விதைக்கபட்டிருக்கு,பீரங்கிதளம் எந்த இடத்தில் இருக்கு,மின்இணைப்புக்கான தலைமையிடம் தலைமையிடம் எங்கிருக்கிறது,முன்னரங்கில் எத்தனை இராணுவத்தினர் நிற்கின்றனர்,அவர்கள் என்னவகை துவக்கு வைத்திருக்கின்றார்கள் என அந்த முகாம்குறித்த அத்தனை வேவு தகவல்களையும் திரட்டி வரைபடமாக்கி முடித்தபின்னரே அம்முகாமைவிட்டு மற்றொரு இரவுபொழுதில் வெளியேறுவார்கள்.

இத்தனை தகவல்களையும் திரட்ட பல கிழமைகள் ஆகும்.எதிரியின் கூடாரத்திற்குள்ளேயே குடியிருந்து அவர்கள் கண்ணில்படாமல் இத்தகைய அலுவலை செய்ய எத்தனை மனவுறுதி,எத்தனை இலட்சிய உறுதி வேண்டும்,எத்தனை சுயம் அறுத்த அர்பணம்வேண்டும் எண்ணிபாருங்கள்.இரண்டு மூன்று கிழமைகள் இவர்களுக்கு சாப்பாடு என்பது வைட்டமின் குலிசைகளும்,பிஸ்கட்களும்தான்.இவர்களின் அலுவலுக்கிடையில் எதிரியிடம் சிக்கிகொண்டால் அதன் விளைவுகளை அந்த சித்திரவதைக் கொடுமைகளை வார்தையில் வடிக்கமுடியாது.ஒன்றா இரண்டா
எத்தனை தியாகங்களை புரிந்து
எத்தனை அர்பணிப்புகளை செய்து
எத்தனை மனவுறுதியை கொண்டு
உலகத்தாரை உலகவரைபடத்தில் தமிழீழ தேசத்தை தேடவைத்தோம்..

தமிழரின் காலம் தமிழீழ தாகம்
பிரபாசெழியன்.