உள்ளூராட்சி சபைத் தேர்தலும் தமிழ் மக்கள் மன நிலையும்!

ஈழத்தீவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலானது நீண்ட வரலாற்றையுடையது. சிறிலங்கா அரசால் தமது என வரலாற்று நூல் என கூறப்படும் மகாவம்சம், உள்ளூர் நிர்வாகம் நாகர குட்டிக (Nagara Guttika) என அழைக்கப்படும் நகரத் தலைவர்களால் நடத்தப்பட்டதாகக் கூறுகிறது.

இது தவிர கம்சபா என அழைக்கப்பட்டு வந்த கிராமச் சபைகளும் இருந்துள்ளன. கிராம நிர்வாகம் தொடர்பில் ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமத் தலைவர்களின் கீழ் அமைந்த இச் சபைகளுக்கு சிறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைக் கையாளவும், தகராறுகளைத் தீர்த்துவைக்கவும் உரிமைகள் இருந்தன.

அக்காலத்துக் கிராம சபைகள், முக்கியமாக வேளாண்மை தொடர்பான பொறுப்புக்களையே கவனித்து வந்ததுடன் அவை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எனப்படுவது உள்ளூர் தலைமைத்துவங்களைக் கட்டியெழுப்புவதற்காதாகவே காணப்பட்டது. ஆனால் இம் முறை அதாவது 2018 தேசிய அரசியலை நிர்ணயிக்கும் களமாக மாறியுள்ளது.

எதிர் வரும் உள்ளூராட்சி சபை (2018) தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்படும் வேட்பு மனுக்களில் 25% பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாத வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுமென்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்ததை அடுத்து போட்டியிடும் கட்சிகள் முண்டியடித்துக்கொண்டு பெண் வேட்பாளர்களை தேடி அலைந்து உள்வாங்கிக்கொண்டன.

வடக்கு கிழக்கில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு தடுமாற்றம் கொண்டுள்ளது . கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ் பிரேமசந்திரன் பலகுத்துக்கறங்கள் அடித்து பின் ஆனந்த சங்கரியுடன் கைகோர்த்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி “சைக்கிள்” சின்னத்தில் தமிழ் தேசிய பேரவை என களம் இறங்கியுள்ளது.

உள்ளுராட்சி தேர்தல் இனப்பிரச்சனைபற்றி பேசுவது என்பது “ இருந்த வெள்ளத்தை வந்த வெள்ளம் கொண்டு போய் விட்ட நிலை தான்” ஊரில் சமூகத்தொண்டுகள் செய்யும் சிலர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அவர்களை தேர்வு செய்தால் ஊர் வளமாகும் ஆனால் குறித்த வேட்பாளர்கள் போட்டியிடும் கட்சி தமிழ் இன துரோக கும்பல் கட்சிகள்மற்றும் பேரினவாதக் கட்சிகள்.

நல்ல சமூக தொண்டர்களை திட்டமிட்டு தமிழீன எதிர்கடசிகள் தமது கபட பேச்சினால் கபளீகரம் செய்தமை பெரும் சபக்கேடு.

கட்சியா? சின்னமா? கொள்கையா? நிறமா? பாரம்பரியமா? நட்பா? உறவா? இதில் எது மக்களின் தெரிவு? அல்லது இவற்றிக்கு அப்பாட்பட்டு சேவை உள்ளம் கொண்ட வேட்பாளரா?

மக்களின் மன நிலை என்ன ?  தேர்தல் வாக்குக்கள் பதில் சொல்லும்.