15232048_122129954942006_8839882248756860168_n

03/12/2018 அன்று 70 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை ஐயா 

அள்ளிவர ஏன் ஆசை வரவில்லை
வடித்து இறக்கினால்
ரோஜா நிறத்தில் பூத்திருக்கும்
”பூநகரி” மொட்டைக்கறுப்பன் சோறு,

கரைத்துக் காய வைத்த
களிமண்போல
பசைப் பிடிப்பாகக் குழையும்
”பலாலி” மரவள்ளிக் கிழங்குக் கறி,
‘பொன்னாலை’ப் பாலத்து சிறுதிரளிக் குழம்பு

எல்லாம் குழைத்து ஒரு கவளம்
செத்தவன் நாக்கிலும் நீரூறும்.
உண்டு மகிழ்ந்து எத்தனை நாளாச்சு?
சாப்பிட்ட வாய்க்கு ஒருபிளவு பாக்கும்,
சாறு பிழியும்

”மாவிட்டபுரத்து” குருத்து வெற்றிலையும்
வாய்க்கு ருசி.
சாப்பிட்டால் நாக்குச் சிவக்கும்
எத்தனை நாளாச்சு?
எங்கள் நிலம்
எங்கள் கடல்

ஆனால் போக முடியவில்லையே
உனக்கேன் கோபம் வரவில்லை?
மொட்டைக் கறுப்பனை மறந்து
சீனத்துப் பச்சையுடன் திருப்தி கொண்டாயா?

”ஆணையிற” வில் உப்பு வீணில் கரைகிறது
அள்ளிவர உனக்கேன் ஆசை வரவில்லை?
இழந்தவற்றை மீளப்பெற
எழும்பு.
-புதுவை இரத்தினதுரை ஐயா
நன்றி (மார்கழி 1993 வெளிச்சம்)

(www.eelamalar.com)