என் ஈழ தேசமே நலமா …??

எம் உதிரத்தால் சிவந்து நின்ற
என் வன்னி மண்ணே நலம் தானா ….
என் உணர்வுகளை உயிராக்கும்…
எம் மாவீரரே நலம் தானா …..

என் பாதங்களை நனைத்துச் சென்ற
முல்லைக் கடலே நலம் தானா ….
எம் ஓலங்களால் ஆர்ப்பரித்த
நந்திக் கடலே நலம் தானா …..

என் மேனியை தீண்டிச் சென்ற …
உப்பளக் காற்றே நலம் தானா …
எம் கரும்புலிகள் வீரம் சொல்லிய …
கந்தகக் காற்றே நலம் தானா …..

என் காலடிகள் தேடி ஓடிய ..
பதுங்கு குழிகளே நலம் தானா …
எம் தேசத்தை காத்து நின்ற
காவலரண்களே நலம் தானா ….

எம் வீரர்கள் பாதம் பதிந்த
காடு மலைகளே நலம் தானா …
எம் புனிதர்கள் உறங்கிக் கிடக்கும்..
துயிலுமில்லங்களே நலம் தானா ….

எம் உறவுகளை இழந்து தவித்த ..
முள்ளிவாய்க்கால் நிலமே நலம் தானா..
எம் கனவுகளை தொலைத்து நின்ற…
முட்கம்பி வேலிகளே நலம் தானா …

எம் அவலங்களால் உடைந்துபோன
என் தாய் தேசமே நலம் தானா ….
எம் உயிரிலும் மேலானா …
என் அண்ணணே நலம் தானா …..

ஈழ தேசத்தின் நினைவுகளோடு ….

எஸ் . றதன் கார்த்திகா.