எமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும்.

கலை, இலக்கியங்கள் இன்றைய போராட்ட வாழ்வை சித்தரிப்பதாக அமையேண்டும். இன்றைய காலத்தை உருவகிப்பதாக அமைய வேண்டும். இன்றைய வரலாற்றுப் போக்கை பதிவுசெய்வதாக இருக்க வேண்டும்.

கலையும், இலக்கியமும் வாழ்க்கையை கருப்பொருளாகக் கொண்டவை, வாழ்க்கையை தரிசித்து நிற்பவை, வாழ்பனுபவத்தை குறியீடு செய்பவை. இன்று எமது வாழ்வும், வாழ்வனுபவமும் விடுதலை வேண்டுய ஒரு போராட்டத்துடன் பிணைந்து நிற்கிறது. இந்தப் போராட்டச் சூழ்நிலையே எமது வாழ்வை நிர்ணயிப்பதாகவும் அமைந்துவிட்டது. எனவே, எமது கலை,இலக்கியங்கள் இந்தப் போராட்ட வாழ்வின் தன்மைகளை, அந்த வாழ்வில் பிறக்கும் ஆழமான அனுபவத்தழும்புகளை, உணர்வுகளை சித்தரித்துக் காட்ட வேண்டும். அதே வேளை விடுதலை என்ற உன்னதம் பற்றி விழிப்புணர்ச்சியைத் தோற்றுவிப்பதாக அமையும் போது அவை சிறப்புப் பெறுகின்றன. மானிட விழுமியங்களை வலியுறுத்தி, மனித மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்ட படைப்புக்களே சிகரத்தை எட்டுகின்றன.

தமிழீழப் போராட்டச் சூழலில் இன்று மையம் கொண்டிருக்கும் இலக்கிய எழுச்சி எதிர்காலத்தில் அதி உன்னதமான ஆக்க இலக்கியங்களைப் படைத்து உச்சங்களைத் தொடும் என்று திடமாக நம்புகின்றேன்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள்.

எரிமலை (சித்திரை 1998) இதழிலிருந்து.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”