மீள் பதிவு
1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் பிறேமதாசா அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற சமயம்.

பேச்சுவார்த்தையில் பங்கு பற்றுவதற்காக தேசத்தின் குரல் பாலா அண்ணை தலைமையில் கிட்டண்ணை,யோகி அண்ணை, மாத்தையா, லோறன்ஸ் திலகர், அடேல் பாலசிங்கம் உட்பட பல முக்கிய தளபதிகள் கொழும்பில் நின்றனர்.

அவ்வேளையில் பருத்தித்துறையில் ஶ்ரீலங்கா காவல் நிலையத்திற்கு அருகில் இருந்த வீதியால் சென்றுகொண்டிருந்த தமிழிச்சி ஒருத்தியை, சிங்களக் காவலர்கள், வலிந்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தினுள் வைத்து அத்துமீறி நடக்க முயற்சித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தினை அறிந்த வடமராட்சியில நின்ற புலிகள் இரவோடிரவாக காவல் நிலையத்தினை முற்றுகையிட்டு அப் பெண்ணை மீட்டெடுத்ததனர். அத்தோடு நிற்காது முகாமினை சுற்றிவளைத்து போராட்டத்தினையும் ஆரம்பித்துவிட்டனர்.
அப்பொழுது அதிகாலை வேளையில் அங்கு வந்த சூசை அண்ணை அவர்கள் முகாமை சுற்றி வளைத்து போராடிக்கொண்டு நின்ற புலிகளை அழைத்து
“பாலாஅண்ணை உட்பட எமது முக்கிய தளபதிகள் கொழும்பில் உள்ளனர். இப்போது இங்கு பிரச்சனை பண்ணினால் எமது தளபதிகளுக்கு கொழும்பில் ஏதாவது ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது” எனவே போராட்டத்தை நிறுத்துமாறு கூறுனார்.

போராட்டத்தினை நிறுத்திவிட்டு,சூசை அண்ணை அப்படியே நேரடியாகச் தலைவரிடம் சென்று நடைபெற்ற சம்பவங்களைக் தெரியப்படுத்தினார்.

சூசை அண்ணை கூறியவற்றைக் கேட்ட தலைவர், “வந்தமாதிரியே திரும்பிச் சென்று நிறுத்திய போராட்டத்தினை உடனே ஆரம்பிக்கச் சொல்லு. நீ ஏன் போராட்டத்தினை நிறுத்தினாய்?” என்று கடிந்துகொண்ட தலைவர். “எமது பெண்களின் மானத்தை விட எமது உயிர்கள் பெரியதல்ல. எமது பெண்களையும், அவர்களது மானத்தையும் பாதுகாப்பதுதான் எமது முதன்மைப் பணி. பெண்களின் மானத்தை பணயம் வைத்து எமது உயிர்களுக்கு பாதுகாப்புத் தேடுவதென்று நினைப்பது அபத்தம்? என்று சூசை அண்ணைக்கு நல்ல பேச்சுக்கொடுத்து அனுப்பிவைத்தார்.

அதன் பின்னர் மீண்டும் போராட்டத்தினை ஆரம்பித்த புலிகள் அதில் சம்மந்தப்பட்ட சிங்களக் காவலர்கள் அனைவரையும் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.