எரிந்த நினைவுகளின் அழியாத தடங்கள்!

தென்னாசியாவிலேயே பெரிய நூலகமாக விளங்கிய யாழ் நூலகம் மே மாதம் (31) திட்டமிட்டு ஏரியூட்டப்பட்டு. 37 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

1981 ஆம் ஆண்டு சூன் 1 ஆம் திகதி இரவு சிங்கள பேரினவாத தலைவர்களின் பணிப்புக்கு அமைவாக சிங்கள காவல் துறையினர் தீ மூட்டினர்.

அன்று அவர்கள் மூட்டிய தீ நூல்கள் எரிந்த பின் அணைந்து விட்டது. ஆனால் அன்று எரியத்தொடங்கிய தமிழனின் அகத் தீ இன்று வரை எரிந்து கொண்டுதான் இருக்கிறது. 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் இது ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது.

இந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

இந்த நூலக எரிப்பில் சிறிலங்காவின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட பல ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்களும் அடங்கியிருந்தனர்.

1981 ஆம் ஆண்டு எரித்த நூலகத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பொதுமன்னிப்புக் கோரினார்.

நன்கு திட்டமிட்டு தமிழரின் மூளையை எரித்து சாம்பலாக்கிய சிங்கள பேரினவாதம் தன் வாக்கு வங்கிக்காக மன்னிப்பு என்ற நடிப்பை நாடாளுமன்றில் நடத்திமுடித்தது.

”எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்க படுகின்றதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் ” என  சேகுவரா சொன்னது பொய்த்து போகவில்லை.