“எல்லோருக்கும் பயம் இருக்கு”
(விடுதலைப் புலிகளை அழிச்சிட்டோம் என்டீங்க இப்ப இப்படி சொல்லுறீங்க.)

மீண்டும் பலமாகும் தமிழீழ விடுதலைப் புலிகள்…!

இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டாலும், வெளிநாட்டில் அவர்கள் செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகள் செயற்பாட்டு ரீதியாக முற்றாக அழிக்கப்பட்ட போதும், தற்போது செயற்படுவதாக ஜேர்மன் அறிவித்துள்ளது.
ஜேர்மன் தேசிய புலனாய்வு பிரிவு சேவை தங்கள் வருடாந்த அறிக்கையில், இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவ்வாறு இயங்கும் விடுதலை புலி உறுப்பினர்கள் 1000 பேர் ஜேர்மனில் தங்கியிருந்து நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் புலனாய்வு பிரிவு பிரதானி பேராசிரியர் ஹான்ஸ் ஜோர்ஜ் மாசேன் (Hans Georg Maassen) என்பவரினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை ஜேர்மன் அமைச்சரவை அமைச்சர் பேராசிரியர் தோமஸ் டே மிஸ்யேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அமைச்சர் மற்றும் புலனாய்வு பிரிவு பிரதானியினால் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டு இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினருக்கு புலம்பெயர் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உதவி செய்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்குள் செயற்படுகின்ற கலாச்சார திட்டங்கள் ஊடாக விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்காக நிதி உதவி வழங்கப்படுவதாக ஜேர்மன் புலனாய்வு பிரிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.