ஏழு முஸ்லிம் நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கத் தடை!

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் ஏழு முஸ்லிம் நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அமெரிக்க அதிபர் ரொனால்ட் ட்ரம்ப் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அந்த வகையில் ஈரான், ஈராக், சிரியா, லெபனான், யேமன், சூடான் மற்றும் சோமாலிய நாட்டு மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களும் அந்நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானம் ரொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வாக்குறுதியெனவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்குமிடையில் சுவர் எழுப்பும் பணிகளும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.