ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியது பிரிட்டன்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும்.

இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் தலைவர்களும் கூடி பேச்சுவார்த்தைக்கான ஆணையை வழங்குவர். இதனையடுத்து ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் பிரித்தானியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்.

இதில் வர்த்தகம் தொடர்பான உடன்படிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சிக்கல் நிறைந்தவை. இதற்காக சில நாடுகள் தமது நாட்டில் வாக்கெடுப்புக்கூட நடாத்தக்கூடும். எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் பிரிட்டனுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் செல்லுமாயின், இரண்டு ஆண்டுகளின் பின்னர் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தானாக விலகும் நிலை உருவாகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(www.eelamalar.com)