ஐ.நாவிலும் பேரினவாத முகம் காட்டும் சிங்களம்: அச்சுறுத்தப்பட்ட ஈழத்தாய்மார்

தமிழீழம், வடக்கு கிழக்­கில் இருந்து ஐக்­கிய நாடு­கள் சபைக்­குச் சென்ற காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் பிர­தி­நி ­க­ளான தாய்­மார்­க­ளுக்கு, அங்கு வைத்து சிங்­களப் பிர­தி­நி­தி­க­ளால் அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வு­கள் பல்­வேறு மாவட்­டங்­க­ளில் தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரும் நிலை­யில் வடக்கு கிழக்­கைச் சேர்ந்த 5 பெண்­கள் மனித உரி­மை­கள் அமர்­வில் கலந்து கொண்டு வாக்கு மூலம் அளிப்­ப­தற்­காக அண்­மை­யில் ஜெனி­வா­வுக்­குச் சென்­ற­னர்.
இது தொடர்­பில் பாதிக்­கப்­பட்ட தாய்­மார்கள் தெரி­வித்­த­தா­வது:

அங்கு, கிளி­நொச்சி மாவட்­டத்­தைச் சேர்ந்த இரு­வ­ரும் மற்­றும் அம்­பாறை மாவட்­டத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரும் இரண்­டா­வது அமர்­வுக்­காக அழைக்­கப்­பட்­டோம். இதன்­போது, சுதந்­தி­ர­மான முறை­யில் கருத்­துக்­களை தெரி­விக்­க­வி­டாது சிங்­க­ளப் பிர­தி­நி­தி­கள் எம்மை அச்­சு­றுத்­தி­னர்.

‘‘இலங்­கைப் போரில் யாரும் காணா­மல் போக­வில்லை. இவர்­கள் (நாங்­கள்) சொல்­வ­து­போல் தடுப்பு நிலை­யங்­கள் இலங்­கை­யில் இல்லை. நாங்­கள் சகோ­த­ரத்­து­டன்­தான் பழ­கு­கின்­றோம். அதற்கு உதா­ர­ண­மாக விசு­வ­மடு இடம்­பெற்ற இரா­ணுவ அதி­கா­ரி­யின் பிரி­யா­விடை வைப்­ப­வத்தை குறிப்­பி­ட­ லாம். போர் இடம்­பெற்ற காலத்­தில் இரு­த­ரப்­புக்­கும் இழப்­பு­கள் ஏற்­பட்­டன.

இங்கு வந்­துள்­ள­வர்­கள் புலி­க­ளின் ஆட்­கள். அவர்­கள் பொய் சொல்­கின்­ற­னர்’’ என்­று அதி­கா­ரி­க­ளுக்கு சிங்­க­ளப் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர். இதன்­போது நாம், ‘போர் நிறை­வ­டைந்த பின்­னர் இலங்கை இரா­ணு­வத்­தி­டம் எமது பிள்­ளை­களை ஒப்­ப­டைத்­தோம். இலங்கை இரா­ணு­வத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்­கள் எங்கே என்­று­தான் நாம் கேட்­கின்­றோம்’ எனத் தெரி­வித்­தோம்.

அங்கு நிகழ்வை ஏற்­பாடு செய் த­வர்­க­ளால் சனல்-4 காட்சி காண்­பிக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அங்கு இருந்த பிர­தி­நி­தி­க­ளு­டன் வாய்­தர்க்­கம் ஏற்­பட்­டது. சிங்­கள பிர­தி­நி­தி­கள் எங்­களை அடிப்­பது போன்று நெருங்கி வந்­த­னர். ஆனால் அங்­கி­ருந்­த­வர்­கள் அவர்­களை நெருங்க விட­வில்லை. பொலி­ஸார் அழைக்­கப்­பட்டு அவர்­கள் வெளி­யேற்­றப்­பட்­ட­னர். அப்­போது ‘நீங்­கள் அங்கு (இலங்கை) வந்து இருப்­பதை பார்த்­துக்­கொள்­கின்­றோம்’ என்று எங்­களை மிரட்­டிச் சென்­ற­னர்.

இந்­தப் பதற்­றத்­தால் அங்கு எங்­க­ளு­டன் வந்­த­வர் ஒரு­வர் மயங்கி விழுந்­தார். அவ­ருக்கு குறித்த மண்­ட­பத்­தில் 2 மணித்­தி­யா­ல­யங்­கள் சிகிச்சை வழங்­கப்­பட்டு பின்­னர் அரு­கில் உள்ள மருத்துவ மனைக்குக் கொண்டு செல்­லப்­பட்டு சிகிச்சை வழங்­கப்­பட்­டது. அத­னால் அந்த அமர்வு இடை­யி­லேயே நிறுத்­தப்­பட் ட­து– -­என்­ற­னர்.

இதே­வேளை, மனி­த­வு­ரி­மைப் பேரவை அமர்­வில் வாக்­கு­மூ­லம் அளித்த இலங்­கைத் தாய்­மார்­க­ளின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த ஆவன செய்­யும்­படி ஐ.நா மனி­த­வு­ரி­மைப் பேர­வை­யின் தலை­வ­ரி­டம் நாடு கடந்த தமி­ழீழ அரசு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.