ஐ.நா அறிக்கையிடலாளர் இன்று இலங்கை விஜயம்!

11-10-01சிறுபான்மை மக்களின் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையிடலாளர் ரீட்டா இஷாக் நாடியா Rita Izsák-Ndiaye பத்து நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 20ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இவர் அரசாங்க, எதிர்க்கட்சி, சிறுபான்மையினரின் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விசேட சந்திப்புக்களை நடத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் இவர் விஜயம் செய்யவுள்ளார்.

(www.eelamalar.com)