கஜேந்திரகுமார், சுரேஸ் கூட்டிணைவு! புதிய அணி உருவாகியது!

தமிழ் அர­சுக் கட்­சி­யின் சின்­னத்­தில் இனி­மேல் தேர்­த­லில் போட்­டி­யி­ட­மாட்­டோம் என்று அறி­வித்த ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னும் அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­ல­மும் இணைந்து உள்ளூ­ராட்­சித் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­காக புதிய முன்­னணி ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

தாம் இந்த முன்­ன­ணி­யில் போட்­டி­யி­டு­வதை இரண்டு கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் நேற்று உறு­திப்­ப­டுத்­தி­னர். இதில் பொது அமைப்­புக்­கள் சில­வற்­றை­யும் உள்­ள­டக்­கு­வது குறித்து ஆரா­யப்­ப­டு­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டம் யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதன் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­ல­மும் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னும் தமது முன்­னணி குறித்து அறி­வித்­த­னர்.

பேர­வை­யின் நேற்­றைய கூட்­டத்­தில் அதன் இணைத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் பங்­கேற்­றி­ருந்­தார்.

தனது உரையை முடித்­துக்­கொண்டு உடனே புறப்­பட்ட அவர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­ய­போது தமிழ் மக்­கள் பேரவை அர­சி­யல் கட்சி ரீதி­யான எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­காது, மக்­கள் இயக்­க­மா­கவே அது தொடர்ந்து செயற்­ப­டும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஆனால், பேர­வைக் கூட்­டத்­தின் முடி­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய தமிழ்க் காங்­கி­ரஸ் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம், ‘‘தமிழ் மக்­கள் பேரவை நேர­டி­யாக அர­சி­ய­லில் குதிக்­காது.

இருந்­தா­லும் தமிழ் மக்­கள் பேர­வை­யின் பங்­க­ளிப்­பு­டன் ஒரு முன்­னணி நிச்­ச­ய­மா­கத் தேர்­த­லில் போட்­டி­யி­ட­வேண்­டும். ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, பொது அமைப்­புக்­கள் அதில் நிச்­ச­யம் இருக்­கும்’’ என்­றார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ். தலை­வர் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன் தமது முன்­னணி ‘‘மாற்­றுத் தலைமை’’ என்­றார். ‘‘மாற்­றுத் தலைமை தொடர்­பில் நாம் கடந்த சில வரு­டங்­க­ளாக வலி­யு­றுத்தி வந்­தோம். அது இன்று புரிந்து கொள்­ளப்­பட்­டுள்­ளது.

தமிழ் மக்­க­ளின் உரி­மையை வென்­றெ­டுப்­ப­தற்கு சரி­யான தலை­மைத்­து­வம் தேவை. அதற்­குப் புதிய அர­சி­யல் முன்­ன­ணி­யும் தேவை. இன்று அது எல்­லோ­ரா­லும் உண­ரப்­பட்­டுள்­ளது’’ என்­றார் அவர்.

‘‘புதிய முன்­ன­ணி­யின் தேவையை இன்­றைய கூட்­டத்­தில் (நேற்­றைய பேர­வைக் கூட்­டம்) ஏற்­றுக் கொண்­டுள்­ளார்­கள். இது தொடர்­பான பத்­தி­ரிகை அறிக்கை விரை­வில் வரும்’’- என்­றார்.