Kadarkarumpuli-Palan-Ninaivil...........

கடற்கரும்புலி மேஜர் பாலன் உட்பட்ட 7 போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும்

மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி கடல் வழியாக வந்தபோது திருகோணமலை கடற்பரப்பில் ஏற்பட்ட படகு விபத்தைத் தொடர்ந்து நீந்தி கரை சேர்ந்த நிலையில் துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு 28.06.1997 அன்று படையினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைத்திருந்தவேளை தனது நாவினை பற்களால் தறித்து, பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலை அங்கிருந்த கட்டிலில் தனது தலையினை தொடர்ச்சியாக மோதி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் பாலன் அவர்களினதும் இந்த நடவடிக்கையின் போதும் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட போராளிகளினதும் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்கள்……….

கப்டன் தும்பன் (இளையதம்பி லிங்கேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் மேனகன் (குலவீரசுந்தரம் குலசேகரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உத்தமன் (பொன்னுத்துரை அருமைத்துரை – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் சுந்தரவதனி (கதிர்காமர் ஜெயவதனி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஆதனா (செல்வரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம், கிளிநொச்சி)
வீரவேங்கை ஆபனா (தேவரத்தினம் சந்திரமலர் – ஜெயபுரம் கிளிநொச்சி)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Sea Black Tiger Major Valavan Murugesu Uthayakumar Manipay Jaffna

(www.eelamalar.com)