கடற்புறா அமைப்பு எப்படி கடற்புலிகளாக மாறியது

ஆரம்பத்தில் கடற்புலிகள் அமைப்பை தேசிய தலைவர்கள் ஆரம்பித்த போது, அது ஒரு பலமிக்க அமைப்பாக இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் புலிகளின் கடற்படை கடற்புலிகள் எனும் பெயரோடு அழைக்கப்படவில்லை. ஆரம்பத்தில் “கடற்புறா” எனும் பெயருடனேயே கடலில் போராளிகள் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அந்த காலகட்டத்தில் கடற்புறா அமைப்பின் பணி என்பது, எதிரிகளோடு போரிடுவது அல்ல, அந்த அளவுக்கு கடற்புறா பலமிக்க ஒரு அமைப்பாகவும் இருக்கவில்லை. அவர்களின் பணி, தமிழ்நாட்டில் புலிகளின் பயிற்சிப் பாசறைகள் இருந்த போது, ஈழத்தில் இருந்து போராளிகளை பயிற்சிக்காக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதும், பின்னர் அங்கிருந்து அவர்களை மீள அழைத்து வருதல், புலிகளுக்கு தேவையான பெட்ரோல் போன்ற பொருள்களை ஈழத்துக்கு எடுத்து வருதல் என்று, மட்டுப்படுத்தப் பட்ட அளவிலேயே கடற்புறாவின் பணிகள் இருந்து வந்தன.

இந்த சூழ்நிலையில் தான் இந்திய அமைதிப்படை எனும் பெயரில், இந்திய அரக்கபடை ஈழத்தில் காலடி எடுத்து வைத்தது, புலிகளும் வேறு வழியின்றி இந்திய இராணுவத்தினருடன் போராட முடிவு எடுத்தனர். போராடினர்.

ஆசியாவின் பலமிக்க இராணுவமான இந்திய இராணுவம் ஒரு சிறிய போராட்ட அமைப்பான புலிகளை வெகு சுலபமாக தாக்கி அழித்து விடுவார்கள் என்றே அனைவரும் நம்பினர்.

ஆனால் என்ன நடந்தது என்பது இன்று வரைக்கும் வரலாற்று சாட்சியாய் உள்ளது. புலிகளை அழிக்க வந்தவர்கள், புலிகளின் முன்னாள் எலிகளைப்போல் தோற்றுப்போய் தோல்வியுடன் நாடு திரும்பினர்.

இந்த காலகட்டத்தில் சாதாரண அமைப்பாக இருந்து வந்த கடற்புறா அமைப்பு பலமிக்க ஒரு மாபெரும் படையாக வளர்ச்சி அடைந்து, தமிழீழ கடற்படை எனும் பெயரோடு, ஒரு பலமிக்க கடற்படையாக உருவெடுத்து.

இந்திய இராணுவம் திரும்பி சென்ற பின்னர், ஒரு ஊடகவியாளர் சந்திப்பில், தேசிய தலைவர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, “இந்திய அமைதிப்படை ஈழத்திற்கு வந்த போது இருந்த கடற்புறா அமைப்புக்கும், இந்திய அமைதிப்படை திரும்பி சென்ற சூழ்நிலையில் இருந்த கடற்புலிகள் அமைப்புக்கும் என்ன வித்தியாசம்?” என்பதே அந்த கேள்வி.

அதற்கு தேசிய தலைவர் அவர்கள் இப்படி பதில் கூறினார். இந்திய இராணுவம் ஈழத்திற்கு வரும் முன்னர் கடலில் போராளிகள் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்த்தது. அது ஏனென்றால், எம்மை தாக்க வரும் எதிரிகளில் இருந்த தப்பிப்பதற்காக, இந்திய இராணுவம் திரும்பி சென்ற பின்னரும் கடலில் போராளிகள் தமது வேகத்தை அதிகரிக்க வேண்டி இருந்தது அது ஏனெனில், போராளிகளை கண்டு தப்பி செல்லும் எதிரிகளை துரத்திப் பிடிப்பதற்காக…

ஆம், இதுதான் புலிகள், வேதனைகளையும், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றும் வித்தைதான் தலைவன் எமக்கு கற்றுக் கொடுத்த பாடம்.

அன்று, இந்திய இராணுவம் வந்து புலிகளுக்கு ஒரு நெருக்கடியை கொடுத்தான் காரணமாகதான், கடற்புறா அமைப்பு இன்று கடற்புலிகளாக மாபெரும் வளர்ச்சி அடைந்தது. இல்லையேல் இறுதிவரைக்கும் கடற்புறா அமைப்பாகவே இருந்து இருக்கும். அந்த சோதனையான காலகட்டத்தை தான் தலைவர் அவர்கள் சாதனையாக மாற்றி புது வரலாறு ஒன்றை எழுதினார்.

அந்த வரலாற்றை மீண்டும் ஒருமுறை புதுப்பிக்கும் காலம் வந்து இருக்கின்றது. இன்று இருக்கும் சோதனைகளையும் வேதனைகளையும் மாற்றி தமிழீழம் என்ற சாதனையாக மாற்ற தேசியத் தலைவர் அவர்களுக்கு தோள் கொடுப்போம் என்று உறுதி எடுப்போம்…..

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”