கடற்புலிகளின் சமரில் தேசிய தலைவர் கை காட்டிய ஒரு கட்டளை தளபதி.

ஒரு நாட்டின் எல்லை என தரையில் இருப்பது வழமை, அப்படியாக கடலில் ஆழம் தெரியாதது போல் கடலும் பரந்து நீண்டு கிடக்கிறது.

ஒரு நாட்டின் கடற்பரப்பு சராசரி 300 கடல்மைல் (NM) தரையில் ( 3.0 × 10-10 கிலோ மிற்றர் ) கொண்டதாக அமையும் ஆனால் தமிழீழத்தில் 25 கடல் மைல் கொண்டதாக இருந்தது. அது கடற்புலிகளுக்கு ஓயாத அலைகள் வென்றது முதல் கட்டுப்பாட்டுக்குள் சிங்களவன் பிடிதன்னில் இருந்து மீட்ட தமிழீழ மாவட்டங்களில் பயன்படுத்தபட்டதாகும், ஆனால் தமிழீழ தேசத்தின் வளங்களையும், போரியலின் தேவையையும், மக்களின் அத்தியாவசியத் தேவைக்கும் கடற்புலிகளின் கடமை கடலில் எல்லையின் அளவு அளவிட முடியா பரந்து விரிந்தது.

அப்படி ஓர் சம்பவத்தில்….

கடலில் சண்டை மூளும் போது களத்தில் துப்பாக்கிகள் சீரும் சன்னங்களை அளவிட முடியாது. போராளிகள் சிங்கள வெறியனை விரட்டும் நோக்குடன் 1 ரவை சூட்டால் எதிரி உயிர் பயத்தில் 15 ரவை பொழிவான் இது களத்தில் நடக்கும் வழமை.

அப்படியாக ஒரு சண்டை மூண்டது நேரமும் பல மணி நேரம் அதாவது 5 மணி நேரம் அந்த கடற்சமரில் டோறா மூழ்கடிக்கப்பட்டு  கடற்புலிப் போராளிகள் இருவரின் வீரகாவியத்துடன் வெற்றி பெற்று தளம் திரும்பின படகுகள்.

நிதர்சன களப்பிடிப்புப் போராளிகள் கடற்சமரை ஒளிநாடாவில் பதிவு செய்தனர்.

அதை தேசியத் தலைவர் பார்வையிட்டார்.கடற்புலி சிறப்புத் தளபதியுடனும் மற்றும் சில தளபதிகள் போராளிகளுடனும்.

அதிலே ஒரு சண்டை ஆரம்பித்த சில மணித்துளிகள் வரை நீடித்த சென்றுகொண்டிருந்த கடற்சமரில் மற்ற தளபதிகள் மூழ்கியிருக்க, திருப்பி முன்னுக்கு எடுக்குமாறு கட்டளை பிறந்தது. 

அனைவரும் டோறா மூழ்கும் வரை பார்த்து. பின் அனைவரும் போராளிகளை பாராட்டி பேசினார்கள்.

அப்போது தலைவர் கூறினார் நான் அதில் ஒன்றை பார்த்தேன். எதிரியின் படகும் எங்களின் படகும் சிறு இடைவெளி தூரமிருக்க துப்பாக்கிகள் முழங்குகிறன. ஆனால் அதில் ஒரு போராளி தன் கையிலிருந்த AK – 47 துப்பாக்கியால் நிதானமாக பதற்றமில்லாமல் அந்த சூழ்நிலையிலும் குறிபார்த்து சுடுகிறான். 

எந்த சூழ்நிலையிலும் தயங்காமால் ஒரு இராணுவ வீரனுக்குரிய தன்னடக்கத்துடன், இருக்கும் ரவைகளை விரையம் செய்யாமல் களத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்குரிய வல்லமை தெரிகிறது அவனில் என்றாராம்.

மறுநாள் அப் போராளி கடற்புலிகளின் சண்டைப் படகுகளில் ஒரு படகிற்கு கட்டளை அதிகாரியாக செல்கிறான். 

பின்னாளில் அப் போராளியின் சாதனை நீள்கிறது கடல்தன்னில்.

கரிகாலன் வகுப்பின் மாணவனாக அவனை ஈழத்தாய் ஏட்டில் வரைந்தாள்.

இந்தக் காவியம் என் ஆசான் கடற்புலிகளின் இயந்திரவியல் பொறுப்பாளர் லெப் கேணல் கடாபி மாஸ்ரர் 2004ம் வருடம் கூறியது.

உலகின் அனைத்து இராணுவ கட்டமைப்பும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை பார்த்து வியந்ததும்,தலைமையின் வழி நடத்தினலாளும், போராளிகளின் தியாகத்தினாலும் , மக்களின் அர்ப்பணிப்பாலும் வளர்ந்த தமிழீழ தேசத்தை முடக்க அதர்மத்தின் வழி நின்று உலகம் எம்மினத்தை கொன்று குவித்தும் இன்றும் எம் உரிமைக்கு எதிராக பல இழிநிலையை செய்த வண்ணம் உள்ளன.

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||