“கடலிலே காவியம் படைப்போம்”

07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினருடனான கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவுக்குப் பதிலடியாக ஒரு தாக்குதலும், அதேவேளை திருகோணமலைக்கான விநியோக நடவடிக்கையும் தலைவரால் கடற்புலிகளிடம் கொடுக்கப்படுகிறது.

அதற்கமைவாக 14.10.1999 அன்று அப்போதைய கடற்த் தாக்குதல் தளபதியான லெப். கேணல் இரும்பொறை மாஸ்ர் தலைமையிலான அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கடற் சண்டைப் படகுகளும் லெப். கேணல் மங்களேஸ் தலைமையிலான விநியோகப் படகுகளும் ஒழுங்கமைக்கப்படுகிறது. திட்டத்தின்படி விநியோக நடவடிக்கை முடிவுற்றதும் எமது வலிந்த தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், நாம் வநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எமது விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளை கடற்சண்டை ஆரம்பமானது இச்சமரில் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரதும், லெப் கேணல் பழனியினதும் தாக்குதலால் ஒரு டோறாப் படகு நகரமுடியாமல் நிற்க; அவ்வேளையில் பழனி கூட்டி வநத கரும்புலிப் படகை அடிவேண்டி நகரமுடியாமல் நின்ற டோறாப் படகிற்கு பாகையைச் சொல்லி அனுப்பி கட்டளை வழங்கிக் கொண்டிருக்கையில் இருடோறா பழனியின் படகுமீது பக்கவாட்டாக தாகக்குதல் நடாத்த பழனி அவ் டோறாக்கள் மீது தாக்குதல் தொடுத்தான். அதே நேரம் டோறா மீது தாக்குதல் நடாத்தச் சென்ற கரும்புலிப் படகு காலநிலை சீரின்மையால் டோறாவை கண்டுபிடிக்க முடியாதலால் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ருடன் நின்ற கரும்புலிப் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நடவடிக்கையில் ஆறு கடற்கரும்புலிகள் உட்பட ஏழு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

“கடலிலே காவியம் படைப்போம்”

என்றும் அலையரசி.

19ம் ஆண்டு நினைவு வணக்க நாள் — 14.10.2018

14.10.1999 அன்று கொக்கிளாய் கடற்பரப்பில் சிங்கள கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட விபத்தில் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்கேணல் அருந்தவம், லெப்கேணல் புவனேஸ், மேஜர் பரணி/கோபி , மேஜர் கலைமகள், மேஜர் சூரியபிரபா, கப்டன் சுதாகரன் ஆகிய மாவீரர்களின் நினைவு வணக்க 14.10.2018
**********************************
வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு இடையிலான போராளிகளை கொண்டு செல்லும் பணிகளின் போது முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் 14.10.1999 அன்று சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அருந்தவம், கடற்கரும்புலி லெப். கேணல் புவனேஸ், கடற்கரும்புலி மேஜர் பரணி, கடற்கரும்புலி மேஜர் சூரியப்பிரபா, கடற்கரும்புலி மேஜர் கலைமகள், கடற்கரும்புலி கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| வெற்றிக்கு வித்திட்டு கலடன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்………….

இவர்களுடன் கடலிலே காவியம் படைத்த கடற்புலி மறவன்……

முல்லை மாவட்டம் அம்பகாமம் பகுதியை நோக்கி 14.10.1999 அன்று பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட “வோட்டர்ஜெட் 01” படை நடவடிக்கைக்கு எதிராக இடம்பெற்ற முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வாணி ( உட்பட ஏனைய (64) மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

மேஜர் வாணி (மனுவேற்பிள்ளை மேரிஅஜந்தா – முல்லைத்தீவு)
மேஜர் சந்திரா (ஆறுமுகம் அல்லி – கிளிநொச்சி)
மேஜர் இளம்பிறை (நாகேந்திரம் ஜெயகலா – யாழ்ப்பாணம்)
மேஜர் தனா (சுப்பிரமணியம் யோகேஸ்வரி – மன்னார்)
மேஜர் யூதன் (மதுவன்) (இராசரத்தினம் சுகுமாரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் அன்பழகி (பாலசுந்தரம் சுமதி – வவுனியா)
கப்டன் இளவரசி (சிவப்பிரகாசம் அற்புதராணி – முல்லைத்தீவு)
கப்டன் நிலாமதி (முருகையா இராமலட்சுமி – வவுனியா)
கப்டன் ராஜினி (நாகேந்திரம் சுதர்சினி – வவுனியா)
கப்டன் அருந்தா (சிவஞானம் ராஜேஸ் – முல்லைத்தீவு)
கப்டன் ஞானதாசன் (முருகையா பாலசுப்பிரமணியம் – வவுனியா)
கப்டன் திலீபனா (சதாசிவம் சுதாநந்தி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் மலர்நிலா (தவராசா அனுசா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தோகைமயில் (சுந்தரலிங்கம் கோமளேஸ்வரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசைநெறி (துரைரத்தினம் மதுரா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் செவ்வந்தி (இராமையா சந்திரகலா – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ஆதிரை (முத்துலிங்கம் திருச்செல்வி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் வில்லவள் (வன்னியசிங்கம் பிரவீனா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அன்புவிழி (யோகராசா யோகேஸ்வரி – வவுனியா)
லெப்டினன்ட் தர்மாவதி (சீனிவாசகம் ரஜிமளா – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் குட்டிமயி (சண்முகராசா அருமருந்தன் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் தமிழ்க்கவி (மகாகிருஸ்ணன் சிவகுமார் – கிளிநொச்சி)
லெப்டினன்ட் ஆனந் (ஐயாத்துரை இலங்கேஸ்வரன் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கண்ணாளன் (யோகேந்திரன் கஜேந்திரன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் வாகை (ஆறுமுகம் செல்வக்குமார் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அமுதவிழி (வெள்ளைச்சாமி அம்மணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வானிலா (முத்துச்சாமி திலகா – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் சோழமணி (குமார் கலா – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் நகைமலர் (வடிவேல் சிவாஜினி – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மலர்மகள் (அப்பாவு வளர்மதி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அகத்தமிழ் (அரியதாஸ் சந்திரகலா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் அணியரசி (பெரியசாமி யோகேஸ்வரி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஈழவள் (ஞானப்பிரகாசம் மேரிதுசானி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அருந்தா (நாகராசா ஜெயராணி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஜீவிதா (கண்டுத்துரை சூரியகலா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கீர்த்தனா (இரட்ணம் கலைமகள் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர் (பிச்சை கிருஸ்ணகுமார் – கொழும்பு)
2ம் லெப்டினன்ட் வேங்கை (நற்குணராசா உதயராசா – திருகோணமலை)
2ம் லெப்டினன்ட் புதியவன் (காளிதாசன் புவனேந்திரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் இளங்குயிலன் (கந்தசாமி மதனரூபன் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை வளர்மதி(சித்திரா) (கணேஸ் தர்சினி – முல்லைத்தீவு)
வீரவேங்கை அருள்விழி (மனோகரன் மஞ்சுளா – மன்னார்)
வீரவேங்கை மேனகா (பிரியா) (நல்லதம்பி நகுலேஸ்வரி – மன்னார்)
வீரவேங்கை கோசலா (செல்லத்துரை நாகேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை சுகந்தா (அருள்பிரகாசம் கலைவாணி – முல்லைத்தீவு)
வீரவேங்கை தமிழ்வேங்கை (அருளானந்தம் தேவப்பிரியா – கிளிநொச்சி)
வீரவேங்கை பாரதி (யோகராசா விக்கினேஸ்வரி – கிளிநொச்சி)
வீரவேங்கை தனியரசி (பரஞ்சோதி தவமலர் – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சசிகலா (அகரமான்) (யேசுதாசன் மொறின்ஜீஜி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அமுதமுகி (சித்தாயினி) (தம்பிப்பிள்ளை திலகரூபி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அருள்விழி (வில்வரட்ணம் சாந்தா – கிளிநொச்சி)
வீரவேங்கை தணிகா (பேரம்பலம் ஜெயகலா – வவுனியா)
வீரவேங்கை சூட்டி (துரையப்பன் கமலேஸ்வரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புனிதா (அமிர்தநாதன் காந்தரூபி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தூயவள் (பாலசுப்பிரமணியம் சிவரஞ்சினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகல்வாணி (ஸ்.ரீபன் புனிதசீலி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கனிமொழி (நவசிவாயம் சுதர்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை செந்தா (சண்முகலிங்கம் வான்மதி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்கலை (சின்னத்துரை உசாநந்தினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கீதப்பிரியா (விநாயகமூர்த்தி தர்சினி – கிளிநொச்சி)
வீரவேங்கை கனிவிழி (கணேஸ் கேமலதா – மட்டக்களப்பு)
வீரவேங்கை இசைக்குட்டி (உதயகுமார் உசாநந்தினி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதிவதனி (மதிவதனா) (முருகேஸ் கனகேஸ்வரி – வவுனியா)
வீரவேங்கை கௌசலா (முருகேசு கோமளா – திருகோணமலை)

மூன்றுமுறிப்புப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடாத்திய தாக்குதலின்போது….

2ம் லெப்டினன்ட் சாந்தகுமார் (சபாரத்தினம் கணேசமூர்த்தி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குமரிமைந்தன் (கிருபைராசா ஜெயராஜா – மட்டக்களப்பு)

யாழ்ப்பாணம் அனைப்பந்திப் பகுதியில் சிறிலங்கா படையினரால் சுற்றிவளைக்கப்பட்டவேளை தனது கைக்குண்டினை வெடிக்க வைத்து…

மேஜர் இளஞ்செழியன் (கனகசபை நற்சபேசன் – யாழ்ப்பாணம்)

ஆனையிறவுப் பகுதியில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்….

கப்டன் நதியரசன் (ஞானசீலன் எட்வேட்அன்ரனிதாசன் – யாழ்ப்பாணம்)

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”