கடலுக்கு அணை போட்டு கண்களை மூடியவர்கள் எமது மாவீரச் செல்வங்கள்…!

ஏமது மண்ணை மீட்டெடுக்க தங்கள்
உயிரை தாரைவார்த்தவர்கள் தான்
மாவீரர்கள்…

தமிழினத்தின் கருவையே இலங்கைத்

தீவில் இருந்து கிள்ளி எறிந்துவிட வேண்டும்

என்ற இனவெறிக் கொள்கையோடுஇன்று

நேற்றல்ல , புலிகள் பிறக்கும் முன்னரே சிங்களஅரசியல் பிறந்து விட்டது.

கொதிக்கும் தார்ப்பீப்பாவுக்குள் துடிக்கத்
துடிக்க தமிழ் குழந்தையை போட்டுக்
கொன்றார்கள், சிங்கள இனவெறி அன்றே
நடைமுறைக்கு வந்து விட்டது.

இணைப்பு என்பது சிங்கள இனவாத

அரசியல் அகராதியில் தமிழின அழிப்பு

என்று அமைந்துள்ளதை உணர்ந்து தமிழன்

தன்னைக் காப்பாற்றிக் எழுந்த

கொள்ளபோது பிறந்ததே தமிழீழ விடுதலைப் புலிகள்அமைப்பு.

நீதியும் நேர்மையும் மனித நெறிகளும் கூறும்
நியாயத்தின் தேடுதலே எமது போராட்டம்…

இந்த வகையில் அத்துமீறிய சிங்கள
ஆக்கிரமிப்புக் கால்களை வெட்டிவீழ்த்தி
ணைப்பாதுகாக்கும் எமது வழி
தால் அங்கீகரிக்கப்பட்ட வழியே
உலகத்தின் பார்வையிலும் சரி நீதியின்

பார்வையிலும் சரி நாம் தூக்கியுள்ள ஆயு

தம் நீதியை நிலைநிறுத்த எழுந்துள்ள தூண்

உலகத்தை ஈழத்தின் பால் திருப்ப ஈழப்

பிரச்சினையாக , நீதியின் அறைகூவலாக எதி

ரொலிக்கச் செய்ய எத்தனை ஆயிரம் உயிர்
கள் ஆகுதி செய்யப்பட்டுள்ளன…

இனவாத அரசின் சூழ்ச்சிகளுக்குப்

பலியாகாமல், விவேகமாக திட்டமிட்டு

சரியான வழியில் எம்மை அழைத்துச்

செல்லும் எமது தலைவரின் வழி நடத்தலும்

தலைவர் காட்டிய வழியில் துணிவோடு

செயற்பட்டு மாவீரரான மகத்தான ஆன்மாக்

களும்தான் இன்று உலகத்தை ஈழத்தின்

பால் திருப்பியுள்ளன…

அன்று, இலங்கைத் தீவில் எல்லா மூலை

யிலும் தமிழன் சிங்கள இனவாத சக்தியால்

அடித்து நொறுக்கப்பட்டவனே. இன்று.

இலங்கைத் தீவின் சந்து பொந்திலும் கூட

தமிழன் .வெடித்து நிண்று மானம் காக்கிறான்…

கடல் அலைபோல் இனவாத இராணு
வம் படையெடுத்தாலும் அணைபோட்டு
விலையாக உயிர் நீப்போம் என்று தூய்
மையே உருவாக தமிழ் நிலம் காத்து தங்க
ளையே தந்து எதிரியை வென்ற மாவீரரை

எண்ணுகின்ற நாள் இது.

புலிகள் இயக்கம் என்பது தமிழீழ தேசிய
படை என்ற உன்னத நிலைக்கு இன்று
உயர்ந்துள்ளது…

புலிகள் உயிரினும் மேலாக தமிழீழ

மக்களை நேசிக்கிறார்கள் என்பதற்கு இரத்த

சாட்சியானவர் நமது மாவீரர்கள்…

இந்த நாளில் நமது தேசத்தின் அடிமை

விலங்குடைக்க உயிர் கொடுத்த மாவீரரை

அஞ்சலிப்போம்…

இரண்டு நாடுகளின் இராணுவக் கடல்

எமது விடுதலை உணர்வை மூழ்கடிக்க

இரைந்து வந்துள்ளன…

அந்த கடல்களுக்கு அணைபோட்டு

கண்களை மூடிக் காற்றாகி எங்கள் சுவா

சத்தில் கரைந்து இரத்தமாகி உயிரோட்டம்

தரும் உன்னத ஆன்மாக்களை அஞ்சலித்து

நிமிர்வோம்…

சூரியப்புதல்வர்கள் 1995
மாவீரர் நாள் சிறப்பு பதிவிலிருந்து… .!!!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”