images (7)

கடல்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மரணமும் தெளிவான மன உறுதியும்

download (5)

கடல்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மரணமும் தெளிவான மன உறுதியும் திட்டமிடலும் – ஆதி
தலைமையால் கொடுக்கப்பட பொறுப்புகளை சரியாக செய்து இறுதி நிமிடம் வரை தலைமைக்கு விசுவாசமாக நடந்து தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தன்னையே தற் கொடையாக தந்த எமது தளபதி சூசை.

நந்திக்கடல் பகுதியின் பொறுப்பும் பொது மக்களை சரியான நேரம் பார்த்து இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும் பொறுப்பும் தலைவரால் அவரிடம் கொடுக்கப்பட்டது தமிழ் நாட்டில் உள்ள உறவுகளுக்கு சூசை மூலமாகவே செய்திகள் பரிமாறப்பட்டன ஒரு கட்டத்தில் ஒரு போராளி தளபதி சூசையிடம் அண்ணா நிலைமை மோசமாகி வருகிறது நீங்கள் வெளி ஏறுங்கள் நாம் பார்த்து கொள்கிறோம்.

images (9)

அப்போது தளபதி சூசை கோபமாக உங்களை இந்த நட்ராற்றில் விட்டுட்டுப் போய் விட்டால் என் மன சாட்சியே என்னை கொன்று விடும் அதை விட இந்த இடத்தில் வீர மரணம் அடைவதே மேல் ,அப்போது அந்த போராளி தயக்கத்துடனே அண்ணியும் பிள்ளையும் இராணுவத்திடம் பிடிபட்டு விட்டார்கள் அண்ணியிடம் உங்கள் நம்பரை பெற்று கொண்ட இராணுவ புலனாய்வாளர் உங்களுடன் பேச வேண்டுமாம் சரி கொடு என்று வாங்கி பேசிய தளபதி சூசை அவர்கள் எனது மனைவியையும் பிள்ளையையும் கொன்றாலும் அல்லது சித்திரவதை செய்தாலும் நான் சரணடைய மாட்டேன் இங்கு எமக்காக மரணித்த போராளிகள் மேல் சத்தியம் அவர்கள் வழியில் நாமும் செல்வோம்.

download (4)

 

 நாம் கடைசி வரை அவரை காப்பாற்ற முயற்சி எடுத்தோம் அவரது தமிழ் ஈழ பற்றுக்கு முன்னால்
நாம் தோற்று போனோம் ஆம் வயிற்றிலும் தொடையிலும் காயமுற்ற அவரை கார் டியுப்பின் உதவியுடன் தமிழ் நாட்டுக்கு நீந்தி கொண்டு வர முயற்சி செய்தோம் பாதி வழியில் அவர் எங்களை விட்டு போய் விட்டார் திரும்பி வந்து நந்தி கடல் பகுதியில் முகம் மட்டும் தெரிய கூடியவாறு புதைத்து விட்டு வெளியேறினோம்…..( காகங்கள் உடலை கொத்தி சின்னாபின்னம் செய்து விட கூடாது என்பதற்காக )
காரணம் எமது பெரிய அணிகள் வந்தால் அவர்கள் முடிவு எடுப்பார்கள் என்று அதற்குள் சிங்கள இராணுவம் அந்த பகுதிக்குள் வந்து உடலை கை பற்றி கொண்டது தியாகங்கள் தொடரும்…

-ஆதி

3