கட்சியின் அழுத்தம் காரணமாகவே முதல்வரை எதிர்த்தேன்! சிறிதரனின் இரகசிய கடிதம் அம்பலமானது!!

தமிழ் மக்களை ஏமாளிகளாக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் திரைமறைவு நடவடிக்கை ஒன்று வெளியாகியாகியுள்ளமை பலத்த அதிர்ச்சியை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியவாதியாக அறியப்பட்டவர்.

ஆனால் அண்மைக்காலத்தில் அவர் மேற்கொண்ட செயற்பாடுகள் பலத்த ஏமாற்றங்களை அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

தற்போது கட்சியின் அழுத்தத்தின் காரணமாகவே முதலமைச்சரை எதிர்த்ததாகவும் ஆனால் முதலமைச்சரின் பணி தொடரவேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் இரகசியமாக கடிதத்தை முதல்வருக்கு அனுப்பிவைத்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

தான் தொடர்ந்தும் முதல்வருக்கு ஆதரவளிப்பேன் என்றும் ஆனால் கல்வி அமைச்சரை நியமிக்கும்போது அதனை அரியரத்தினத்திற்கு கொடுக்கவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறிதரனின் அண்மைக்கால செயற்பாடுகள் ஒரு பார்வை:

1. அரச சார்பான வரிச்சலுகை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்காக அக்குழுவில் ஐரோப்பா சென்று மற்றவர்கள் வெளிப்படையாக அரச ஆதரவு பரப்புரைகளில் ஈடுபட மௌனமாக தமிழ்ப்பிரதிநிதி என்ற வகையில் இவருடன் இணைந்து கொண்டமை

2.வடமாகாண விசாரணை அறிக்கை வெளிவந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கத்தேவையில்லை என பகிரங்க அறிக்கை விட்டமை

3.முதல்வர் அனைத்து அமைச்சர்களையும் பதவி நீக்கியபோது ஏனைய மாகாணசபை உறுப்பினர்களை ஆளுநருடன் சென்று முறையிட ஒப்புதல் வழங்கியமை

4.பின்னர் ஐங்கரநேசன் நிதிமோசடி செய்தவர் என்றும் மற்றவர் நிர்வாக மோசடி மட்டுமே செய்தவர் என்றும் அதனால் ஐங்கரநேசனை மட்டும் நீக்குமாறு அறிக்கை விட்டார்.

5.அதன் பின்னர் ஐங்கரநேசனையும் குருகுலராஜாவையும் நீக்கலாம் என்றும் ஆனால் மற்ற இரண்டு அமைச்சர்களையும் நீக்ககூடாது என்றும் அறிக்கை விட்டமை

6.முதலமைச்சரை கருணாவின் பிரிவோடு ஒப்பிட்டு பேசியமை

7.முதலமைச்சர் மீது மோசடி வழக்கு பதிவேன் என கனடாவின் டிபிஎஸ் ஜெயராஜ் ஊடாக ஆங்கில ஊடகத்தில் செய்தி கொண்டுவந்தமை

8.இப்போது கட்சிக்காகவே முதல்வரை எதிர்த்தேன் என முதலர்வருக்கு இரகசிய கடிதம் அனுப்பியுள்ளமை.

9.இவை தவிர நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் உறவினரால் நடத்தப்படும் தமிழ்வின் இணையம் மற்றும் ஜேவிபி நியுஸ் ஊடாக முதலமைச்சர் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் தொடர்ச்சியாக அவதூறான செய்திகளை வெளியிட்டு வந்தமை.