13935066_164506860646948_6769388558576786321_n

கண்ணீரில் வாழ்வும் செந்தீயில் உடலும்
எமக்கு எதனாலே ?

13921112_164506817313619_2753199485471537689_n

புயல் காற்று புகுந்தது
பூக்களின் சோலைக்குள்
பூக்களும் உதிர்ந்தது
உயிரற்று மண்ணிலே
நிம்மதி வாழ்வின்றி
செடிகளாய் நாம் அழுதோம்
புயலின் வடிவமாய்
வந்தது சிங்களம்
பூக்களை போலவே உதிர்ந்தனர்
எம் செஞ் சோலை உறவுகள்
கண்ணீரில் மூழ்கியது தேசம்
கூவிடும் குயில்களும் குரலிழந்தது
இனவெறி இராணுவத்தால்
அவைகளும் சிறகிழந்தது
எம்மை காக்க கடவுளுமில்லை
கருணை செய்ய உலகமுமில்லை
கண்ணீரில் வாழ்வும் செந்தீயில் உடலும்
எமக்கு எதனாலே ? இல்லை நீதி
சிவா TE